யாருக்காகவும் பயந்து படத்தின் டைட்டிலை மாற்றாதீர்கள் : விஷால் பேச்சு!

 

  ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரித்திருக்கும் படம் 

 ” நுங்கம்பாக்கம் “

நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல், சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆயிரா , மனோ  இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

A.வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் வேடத்திலும் பென்ஸ் கிளப்                                         

சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு     :    ஜோன்ஸ் ஆனந்த்

இசை              :    ஷாம் டி ராஜ் 

கலை               :     ஜெய்சங்கர்

எடிட்டிங்         :     மாரி

தயாரிப்பு நிர்வாகம்  :     k.சிவசங்கர்

கதை வசனத்தை R.P.ரவி எழுதி இருக்கிறார்.

திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் S.D.ரமேஷ் செல்வன்.

நுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விஷால்.. இந்த படத்தின் முந்தைய டைட்டிலான சுவாதி கொலை வழக்கு  படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டேன் ..

ஒரு நிஜ சம்பவத்தை படமாக்கும் போது அது சம்மந்தமான டைட்டில் வைப்பது தானே நியாயம். அப்புறம் எதுக்கு இப்போ நுங்கம்பாக்கம் என்று டைட்டிலை மாற்றினீர்கள் சென்சாருக்காகவா இல்லை யாருடைய நெருக்குதலுக்காகவோ டைட்டிலை மாற்றினீர்கள் ஏன் பயப்படனும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கு அதே எதிர்பார்ப்பு எனக்கும் இருக்கு.

என்னோட இரும்புத்திரை படத்துக்கு போராட்டம் நடத்தி இரண்டு காட்சிகளை கேன்சல் செய்த கொடுமையையும் சந்தித்தேன். டிஜிட்டல் இந்தியா ஆதார் கார்டு பற்றி சொல்லப் பட்டதால் நானும் பிரச்சனையை சந்தித்தேன். பிரச்சனையை சந்திப்போம் என்றார்

இந்த விழாவில் இயக்குநர் விக்ரமன் ,அஜ்மல் ,எஸ்.ஏ.சந்திரசேகர் ,சினேகன் கதிரேசன் உட்பட பலர் சிறப்புரையாற்றினர்.

இயக்குநர் எஸ்.டி.ரமேஷ்செல்வன் பேசும் போது…

ஒரு கொலை பற்றிய கதையை படமாக எடுத்து விட்டு நான் ஊர் ஊராக ஓடி ஒளிய வேண்டியதாகி விட்டது.

ஜெயிலுக்கு மட்டும் தான் போகல..அந்தளவுக்கு பிரச்சனைகளை சந்தித்து விட்டேன்..

எனக்கு வேற வேலை தெரியாது சினிமா மட்டும் தான் தெரியும். அதுக்காக தான் போராடிக் கொண்டிருக்கிறேன் நிச்சயம் நுங்கம்பாக்கம் நல்ல படமாக வரும் என்றார்.

நுங்கம்பாக்கம் என்ன மாதிரியான கதையை உள்ளடக்கியது என்று இயக்குநர் எஸ்.டி.ரமேஷ்செல்வனிடம் கேட்டோம்…

நுங்கம்பாக்கம் உண்மையை உள்ளடக்கிய கற்பனை கதை.

நாம் எவ்வளவோ படங்களை பார்க்கிறோம் அந்தப் படங்களின் காட்சிகளில் நிஜ சம்பவங்களின் பிரதிபலிப்பு இருக்கும். பாடல் காட்சிகளைத் தவிர மீதமுள்ள அனைத்து காட்சிகளுமே அந்தந்த இயக்குநரின் கற்பனைகள் மட்டுமல்ல.

அவரவர்கள் வாழ்க்கையில் நடந்த  , கேள்விப்பட்ட சம்பவங்களின் தொகுப்பாகவும் இருக்கும்.

நுங்கம்பாக்கம் முழுக்க முழுக்க கற்பனை கதை தான். அதில் கொஞ்சம் நிஜ சம்பவங்களும் கலந்திருக்கும். நான் சினிமாவுக்கு வந்து எதையும் சம்பாதிக்க வில்லை நிறைய இழந்திருக்கிறேன். நிம்மதியையும் சேர்த்து ஜெயிக்கனும்கிற வெறி இருக்கு

உழைக்கவும் செய்கிறேன் வெற்றி அருகில் தான் இருக்கிறது. அந்த வெற்றிக்கனியை இதில் பறிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

நிறைய பிரச்சனைகளை இந்தப் படத்தில் நான் சந்தித்திருக்கிறேன் .. சென்சார் செய்யப் பட்டு U/A கொடுக்கப் பட்டிருக்கிறது.

இந்தப் படத்தைப் பார்த்த தித்தீர் பிலிம்ஸ் k.ரவிதேவன் படத்தின் மொத்த உரிமையை பெற்றிருக்கிறார்கள் ”என்றார் இயக்குநர் எஸ்.டி.ரமேஷ்செல்வன்.

Pin It

Comments are closed.