அஜ்மல் – நிக்கிதா நடிக்கும் ‘ மெல்ல திறந்தது மனசு’

D.V. சினி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் D.வெங்கடேஷ் தயாரிக்கும் படம் “ மெல்ல திறந்தது மனசு “

தெலுங்கில் “ மெல்லக தட்டின்டி மனசு தலுப்புலு “ என்ற பெயரில் வெளியான படமே தமிழில் “ மெல்ல திறந்தது மனசு “ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அஜ்மல் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக நிக்கிதா நடிக்கிறார்.மற்றும் சத்யா, தனுஜா, பரிமளா, நந்தனா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –   எம்.வி.ரகு

இசை           –    சக்ரிmtm1

வசனம்         –   நந்து

பாடல்கள்     –    சி.புண்ணியா

எடிட்டிங்      –    ரெட்டி

கதை, திரைக்கதை, இயக்கம்  –   வம்சி

தயாரிப்பு   –  D.வெங்கடேஷ்

படம் பற்றி இயக்குநர் வம்சியிடம் கேட்டோம்….

சிறு வயதில் தனக்கு மனைவியாக வரபோவது இவள்தான் என்று ஒரு பெண்ணை பெரியோர்கள் சொல்லிவிடுகிறார்கள். அஜ்மல் வளர்ந்து பெரியாளாக வந்த பிறகு அஜ்மல் வேறு இடத்திலும் அந்த பெண் எங்கு இருக்கிறார் என்று அஜ்மலுக்கு தெரியாது.

இடையில் அஜ்மலை ஒருதலையாக காதலிக்கும் பெண் ஒருவர். ஆனால் அஜ்மல் தனக்கு மனைவியாக வரவேண்டிய அந்த சிறு வயதில் சொல்லிய பெண்ணை தேடி ஊர் ஊராக சென்று தேடுகிறார். அந்த பெண்ணை தேடி கண்டு பிடித்தாரா இல்லையா என்பது படத்தின் கிளைமாக்ஸ்.

முழுக்க முழுக்க காதல் மட்டுமே இருக்கும் இந்த “ மெல்ல திறந்தது மனசு “ படத்தில்.