‘அட்டி’ பற்றி குட்டி குட்டி தகவல்கள்!

IMG_9899தயாரிப்பு : E5 என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் இமேஜனரி மிஷின்ஸ்  தயாரித்து  பரிநிதா புரொடக்‌ஷன்ஸ் சுந்தர்.சி.பாபு வழங்கும்  திரைப்படம் “அட்டி”.

இயக்குநர் : இப்படத்தின் இயக்குநர் விஜயபாஸ்கர். இவர் இயக்குநர் சுராஜிடம் மாப்பிள்ளை, அலெக்ஸ்பாண்டியன் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி “அட்டி” திரைப்படத்தின் மூலம் இயக்குநராகிறார்.

ஒளிப்பதிவாளர் : இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் அர்ஜுன். இவர் மெய்யழகி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார்.

இசை : சுந்தர்.சி.பாபு. இவர் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நாடோடிகள், ஆகிய வெற்றிப்படங்களின் வரிசையில் “அட்டி” திரைப்படமும் தமக்கு மாபெரும் வெற்றியை தரும் வகையில் பாடல்கள் அனைத்தும் அனைவரையும் கவரும் வகையில் அற்புதமாக இசையமைத்துள்ளார்.

படத்தொகுப்பு : M.V.ராஜேஷ் குமார். இவர் வேலையில்லா பட்டதாரி, சலிம் ஆகிய வெற்றிபடங்களின் படத்தொகுப்பாளர். அட்டி திரைப்படமும் இவ்வெற்றியின் வரிசையில் வரும் வகையில் படத்தொகுப்பை மிக நேர்த்தியாக கையாண்டுள்ளார்.

சண்டைப்பயிற்சி : சண்டைப்பயிற்சி “பவர் பாண்டியன் மாஸ்டர் (இவர் முன்னணி கதாநாயகர்களின் சண்டைபயிற்சி ஆசான்) அட்டி திரைப்படத்தின் அனைத்து சண்டைக் காட்சிகளையும் மிகவும் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.

பாடல்கள் : பாடல்கள் சினேகன்,  கானா வினோத், கவிவர்மன்,  மற்றும் விஜயசாகர் ஆகியோர் எழுதி உள்ளனர்.

நடனம் : சுரேஷ். முன்னணி நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டரின் ஆஸ்தான உதவியாளரான இவர் அட்டி திரைப்படத்தின் மூலம் நடன இயக்குநராகிறார்.

கலை : ஏழுமலை ஐயப்பன்

கதாநாயகன் : மா.கா.பா. ஆனந்த். வானவராயன் வல்லவராயன் திரைப்படத்தை அடுத்து இவர் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் படம் “அட்டி”. சென்னையை மையமாகக் கொண்ட இக்கதைகளத்திற்கேற்ப தன்னை உருவாக்கிக்கொண்டு கதையின் நாயகனாக மிக அற்புதமாக நடித்துள்ளார்.

கதாநாயகி : கதாநாயகியாக  அஷ்மிதா, கதைக்கு ஏற்ற அறிமுகம். மிகவும் சிறப்பாக தனது கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

சிறப்பு தோற்றம் : அட்டி திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராம்கி நடித்துள்ளார்.இவர் இதுவரை நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வேடத்திலும் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். அட்டி திரைபடத்தில் மீசை இல்லாமல் அற்புதமான தோற்றத்துடன் வருகிறார்.

நடிகர்கள் : இவர்களுடன் முன்னணி நட்சத்திரங்கள் நான் கடவுள் ராஜேந்திரன், அருள்தாஸ், அழகு, ராம்ஸ், மகாநதி சங்கர், யோகிபாபு, கலை, மிப்பு, தங்கதுரை ஆகியோரும் நடித்துள்ளனர்.