அட.. இந்த நடிகருக்கும் டாக்டர் பட்டமா : ஆச்சரியப் பின்னணி!

evg-5பல படங்களில் டிவி தொடர்களில் வலம் வரும் நடிகர் கணேஷ்பாபுவை நாம் சுலபமாக கடந்து போய்விடுவோம். ஆனால் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப் பட்டுள்ளது.

அட..அது எப்படி சாத்தியம்? என்பவர்களுக்கான பதிவு இது…

இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபுவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு Indian virtual University – 25ஆண்டுகால கலை மற்றும் கலாச்சார பங்களிப்பிற்காக வழங்கியுள்ளது.

எளிய விவசாயக்குடும்பத்தில் விழுந்த விதை கணேஷ்பாபு. இந்த விதை முட்டிமோதி முளைக்கத்தொடங்கிய முயற்சிகளின் முக்கிய கட்டங்கள் பல உண்டு..
14வயதில் கலைஇலக்கியப் பாதையில் பயணிக்கத்தொடங்கி ஜெயகாந்தன், சுரதா , வைரமுத்து, போன்ற ஜாம்பவான்களோடு இலக்கிய செயல்பாடுகளில் ஈடுபட்டவர் இவர்.
தெருமுனை நாடகங்கள், ஓரங்க நாடகங்கள், பாவனை நாடகங்கள்  போன்றவை மூலம் அரசின் பல்வேறு திட்டங்களை, தமிழகத்தின் பேருந்தே நுழையாத பல கிராமங்களுக்குக் கொண்டு சென்று, சமூக விழிப்புணர்வையும், கல்வி விழிப்புணர்வையும் ஏற்படுத்தியவர்.

இயக்குநர் பாக்யராஜின் “பாக்யா” இயக்குநர் டி.ராஜேந்தரின் “உஷா” ஆகிய பத்திரிகைகளில் இவர் எழுதிய கவிதைகள் 90களின்தொடக்கத்தில் பாராட்டிப் பேசப்பட்டவை. பட்டியாலாவில் உள்ள North zone cultural centre அழைப்பின் பெயரில், தஞ்சை தொழில்முறை கலைஞர்களுடன் இணைந்து நமது பாரம்பரியக் கலையான கரகம், காவடி ஆகியவற்றை ஹிமாச்சலப்பிரதேசம் தொடங்கி வட இந்திய பகுதிகள் பலவற்றில் நிகழ்த்திக்காட்டியவர்.dr-evg
தஞ்சையில் 8வது உலகத்தமிழ் மாநாட்டு தமிழ்ப் பல்கலைக்கழக அரங்கப்பணியில் ஈடுபட்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு விளக்குநராக செயல்பட்டவர். 1996ல் இவர் எழுதி இயக்கி நடித்த ” Motherland ” எனும் மேடை நாடகத்திற்காக தேசிய விருதைப்பெற்றவர். அதே காலகட்டத்தில் கவியரங்கம், பட்டிமன்றம் என நூற்றுக்கணக்கான இலக்கிய மேடைகளில் பங்கேற்றவர். இலங்கை வானொலியில் “லூக்கஸ் பெர்னாண்டோ” என்ற அறிவிப்பாளரால் இவரது கவிதைகள் பலமுறை வாசிக்கபட்டு கடல் தாண்டிய தமிழர்களால் நேசிக்கப்பட்டது.

இவர் கரந்தைத்தமிழ்ச்சங்கத்தில் பி்.லிட் தமிழ்இலக்கியம் பயின்றபோதே அகில இந்திய வானொலி-திருச்சியில் பகுதி நேர நிகழ்ச்சி அறிவிப்பாளராக பணிசெய்தவர்.பாரம்பரிய இசைமேதை தஞ்சாவூர் சுப்ரமணிய பாகவதரிடம் அடிப்படை இசைப்பயிற்சியும் பெற்றவர். முன்பு செயல்பட்ட JJ TV யில் தமிழக அளவில் “மிஸ்டர் காலேஜ்” பட்டத்தை வென்றவர். “பாரதிதாசன் விருது” தொடங்கி “கலைவாணர் விருது” வரை பல விருதுகளை பல்வேறு இலக்கிய அமைப்பின் மூலம் பெற்றவர்.

வார்த்தைச்சித்தர் வலம்புரிஜான் அவர்களிடம் இவர் செயலாளராக பணி செய்த காலங்களில் இலக்கியம், அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருக்கிறார். கலைஞர் எழுதிய தென்பாண்டிச்கத்தை இளையபாரதி இயக்கியபோது அதில் உதவிஇயக்குநராகவும் பணிசெய்தவர்.

ஒரு துப்பறியும் கதையை உருவாக்க Detective International என்ற துப்பறியும் நிறுவனத்தில் இணைந்து உயிரை பணயம் வைத்து சவால்களை சந்தித்தவர். சினிமா செய்தியாளராக பணியாற்றி பல உச்ச நட்சத்திரங்களை பேட்டி கண்டவர்.
“காலச்சக்கரம்” எனும் கவிதை நூலையும் எழுதியிருக்கிறார். பொதிகை tvயில் நேரலை நிகழ்ச்சித்தொகுப்பாளராகவும் சிலகாலம் செயல்பட்டிருக்கிறார். உலக அளவில் 13சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற “ஒருத்தி” எனும் கலைப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார்.

ஆட்டோகிராப், மொழி, சிவகாசி, ஆனந்தபுரத்துவீடு என 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பெண்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் சமூக படைப்பான “யமுனா” திரைப்படத்தையும் இவர் இயக்கியிருக்கிறா். இந்தப்படத்தின் சில முக்கிய காட்சிகள் புனே திரைப்பட கல்லூரியில் மாணவர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இவர்எழுதிய “யமுனா” திரைக்கதை நூல் ஊடகவியல் மாணவர்களுக்கு படமாகவும் இருக்கிறது. இப்போது சன் டிவியில் வரும் “குலதெய்வம்” தொடரில் “துரைப்பாண்டியன்” என்னும் முக்கிய கநாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

evg2“பனங்காட்டுநரி”, “இன்னும் பேர் வெக்கல” எனும் இரண்டு படங்களை இயக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார். பிரபல பல்கலைக்கழகத்தோடு இணைந்து நடிப்புக்கல்லூரி துவங்க இருக்கிறார். தஞ்சை மாவட்டம் வரகூர் கிராமத்தில்
இன்றும் விவசாயியாக வாழ்ந்துவரும் இளங்கோவன்
விஜயலெட்சுமி மகனான இவர் மேலும் உயர  வாழ்த்துவோம்.