அப்பா பிள்ளை பாசப்போராட்டம் ‘கொளஞ்சி’

kolanji1ஒய்ட் ஷடோஸ் புரோடக்ஷன்ஸ் சார்பாக நவீன் “கொளஞ்சி” படத்தை தயாரிக்கின்றார். இவர் மூடர்கூடம் என்ற படத்தை தயாரித்து இயக்கி பலரின் பாராட்டை பெற்றவர்.

சிம்புதேவன் மற்றும் நவின் ஆகியோர்களிடம் பணியாற்றிய தனராம் சரவணன் “கொளஞ்சி” படம் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார்.

தன் இஷ்டம் போல் வாழ நினைக்கும் 12 வயது சிறுவனுக்கும், பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என நினைக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டமும் இதனால் ஏற்ப்படும் விளைவுகளும்தான் “கொளஞ்சி” படத்தின் கதை.

சமுத்திரகனி, சங்கவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இவர்களுடன் ராஜாஜி, நேனா சர்வார், கிருபாகரன், நசாத், ரஜின்.எம், பிச்சைகாரன் மூர்த்தி, ருஜீல் கிருஷ்ணா, நாடோடிகள் கோபால், ரேகா சுரேஷ், ஆதிரா ஆகியோர் நடிக்கின்றனர்.

ராசிப்புரம், கோக்கராயன் பேட்டை போன்ற பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

தற்போது “கொளஞ்சி” படத்தின் இறுதுக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவரும் நிலையில் இப்படத்தின் இசை வெளியிடு விரைவில் நடைபெறவுள்ளதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.kolanji2