அம்பேத்கர் : ஒரு தேசத்தலைவரின் படம்!

bapasahib RUN HORSE MEDIA வழங்கும் பாபா சாகேப் இத்திரைப்படத்தைப்பற்றி இயக்குநரும் மற்றும் தயாரிப்பாளருமான திரு அஜய்குமார் கூறுகையில்,
Dr. அவர்களின்  வாழ்க்கையை மையக் கருவாக வைத்து உருவாகவிருக்கும் திரைப்படம்தான் பாபா சாகேப். இது சாதி தலைவரின் படம் அல்ல, தேசத்தலைவரின் படம் என்பதை கருத்தாக கொண்டு உருவாகவிருக்கும் படம்.
தமிழ் சினிமாவில் இப்பொழுதெல்லாம் ரவுடிகளின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் அதிகமாக வருகிறது, நாம் ஏன் ஒரு தேச தலைவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ஒரு திரைப்படம் உருவாக்க கூடாது என்ற எண்ணத்தில்தான் இத்திரைப்படத்தை உருவாக்கவிருக்கிறேன்.
ஹாலிவுட்டில் அட்டன்பிரோ என்ற இயக்குநர் காந்தியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கும்பொழுது, தமிழனாகிய நான் ஏன் ஒரு தேச தலைவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்ககூடாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த பாபா சாகேப்.
அம்பேத்கர் உருவம் கொண்ட ஒருவருக்காக சுமார் 10,000 பேர்க்கு மேல் தேர்வு நடத்தினோம், கிடைக்கவில்லை. இறுதியாக எங்கள் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மோகன் அவர்கள் ஆய்வுக்கூடம் திரைப்படத்தின் நாயகன் ராஜ கணபதியை அறிமுகம்செய்தார், அவர் தோற்றத்தில் பாபா சாகேப் போல உள்ளதால் அவரை தேர்வு செய்தோம், மேலும் இத்திரைப்படத்திற்காக அம்பேத்கரின் குழந்தை மற்றும் இளமை வயது தோற்றத்திற்கும்  பாரதியார், பெரியார் போன்ற பல்வேறு தலைவர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. அண்ணல் அம்பேத்கரின் 125வது  பிறந்தநாள் கொண்டாட்டமும், நடிகர்களுக்கான தேர்வும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.
இவ்விழாவை அனைத்து இந்திய பாதுகாப்பு H V F Dr அம்பேத்கர் தேசிய தொழிலாளர் சங்கத்தால் நடத்தி சிறப்பிக்கப்படவிருக்கிறது.  தேர்வு நடைபெறும் முகவரி,
நாள் :19/06/2016
இடம்:வள்ளுவன் வாசுகி மண்டபம், அஜய் விளையாட்டு அரங்கம் அருகில்,
ஜெக ஜீவானந்தம் சிலை சாலை, முருகப்பா கல்லூரி பஸ் ஸ்டாப், ஆவடி,
சென்னை -54
தொடர்பு; 80569 46323,70929 51113.
MAIL: ajaays2015@gmail .com