அருண் வைத்யநாதன் இயக்கத்தில் அர்ஜுன் நடிக்கும் புதிய துப்பறியும் – போலீஸ் த்ரில்லர் திரைப்படம்.

arjun1‘கப்பல்’ திரைப்படத்தை வெற்றிகரமாகக் கரை சேர்த்த ‘பேஷன் பிலிம் ஃபேக்டரி’ அடுத்ததாக ஒரு பிரமாண்ட த்ரில்லர் கதையுடன் களம் இறங்குகிறார்கள். அர்ஜுன், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், வைபவ், இவர்களுடன் ஒரு கலக்கும் கதாபாத்திரத்தில்  ‘பாபி சிம்ஹா’வும் இணைந்து கொள்ள ஹாலிவுட் தரத்தில் தயாராகவுள்ளது இப்புதிய திரைப்படம்.

இவர்களுடன், திரையுலகின் மற்றும் சில முன்னணி நடிகர்களும் பங்களிக்க இருக்கிறார்கள். மலையாளத்திலும், இந்தியிலும் மட்டுமே பெரிதாக உருவான ‘மல்ட்டி-ஸ்டாரர்’ திரைப்படங்களுக்கு இணையாக, தமிழில் அப்படி ஒரு ‘பல முன்னணி-நடிகர்’ குழுவை அபாரமான தனது  கதையின் மூலம் தன்வசப்படுத்தியிருக்கும் இயக்குநர் அருண் வைத்யநாதனுடன் ஒளிப்பதிவாளர் அர்விந்த்  கிருஷ்ணா, இசையமைப்பாளர் நவீனுடன் படத்தொகுப்பை ஏற்றிருக்கிறார் சதீஷ் சூர்யா. முற்றிலும் புதிய கோணத்தில், மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறார்கள் உமேஷ், சுதன் மற்றும் ஜெயராம்.