அருள்நிதி நடிக்கும் அடுத்த படம் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் ‘

npnio-1தமிழ்த் திரை உலகில் தற்போது   புதிய  சிந்தனை உடைய நவீன கதைகளுக்கு முன்னோடியாக இருக்கும் ஜே எஸ் கே  பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமும் , லியோ  விஷன் நிறுவனமும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ , ‘இதற்காகத்தான் ஆசை பட்டாயா பால குமாரா’,தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘அண்டாவ காணோம்’ ஆகிய படங்களை தொடர்ந்து அடுத்து தயாரித்து வெளியிட இருக்கும் படம் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’.  சிந்தனையை தூண்டும் , குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்கும் நகைசுவை சித்திரமான இந்த படத்தின் தலைப்பே கதை சொல்லும்.’நல்ல பொருத்தமான தலைப்பே படத்தின் வெற்றியை 50 சதவீதம் தீர்மானிக்கும் ‘என்கிறார் லியோ விசன் ராஜ் குமார்.அவரது முந்தைய படங்களும் இதை போலவே நீண்டதலைப்பு உடைய படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ இதுவரை கேட்டிராத, பார்த்திராத ஒரு புதிய கதையாகும்.புதிய இயக்குநர் ஸ்ரீ கிருஷ்ணா இந்த கதையை சொல்லும் போதே இதை தயாரிக்க வேண்டும் என்று உடனடியாக முடிவு செய்து விட்டேன்.மாதிரி கிராமமாக திகழும் ஒரு கிராமமும்,அந்த ஒழுக்கம் தங்களுக்கு அசௌகரியம் தருகிறது என கருதும்  நாலு போலீசையும் பற்றிய கதை தான் ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ .

”இந்தக் கதை ஓட்டத்தை குலுங்க வைக்கும் நகைச்சுவை மூலம்  எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் படமாக்கி இருக்கிறோம்.அருள்நிதி நாயகனாக நடிக்க அவருக்கு இணையாக நடித்து இருப்பவர்  ரம்யா நம்பீசன். சிங்கம் புலி மற்றும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த  காணோம்’ புகழ் பகவதி பெருமாள் தங்களது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை நிச்சயம் கவர்வார்.  என்னுடைய பட நிறுவனமான ஜே எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் லியோ visions சார்பாக மேலும் திறமைகளை அறிமுகம் செய்ய உள்ளோம்”என உவகையோடு கூறினார் ஜே சதீஷ் குமார்.