அறிவழகனுக்கு காதலியாகும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா?

iyetஒருவர் காதலர் தினத்தன்று பிறந்திருந்தால் அவர் எத்தனை பேரானந்தமாக இருப்பார்? ஆனால், இதுவரை அவருக்கு காதலியே கிடைக்கவில்லையென்றால், அது அவருக்கு எத்தனை கொடுமையான சூழ்நிலையாக இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்தான் அறிவழகன். காதலர் தினத்தில் பிறந்து இதுவரை தனது வாழ்க்கைத் துணையை சந்திக்காமலேயே இருக்கிறார்.

பியூட்டி பார்லருக்குப் போகாத, மொபைல் டாப் அப் பண்ணச் சொல்லாத, ஷாப்பிங் போக வேண்டும் என நச்சரிக்காத பெண்கள் உடனே அறிவழகனை அணுகலாம்.

குறிப்பு : மாதம் ஐம்பதாயிரத்திற்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

அன்புடன்,
அறிவழகன.

இப்படிப்பட்ட  ஒருவனின் கதைதான் ‘இவன் யாரென்று தெரிகிறதா’ படம்.

எஸ்.டி.சுரேஷ்குமார் இயக்கத்தில் ரொமான்டிக் காமெடிப்படமாக உருவாகிவரும் ‘இவன் யாரென்று தெரிகிறதா’ படத்தில் விஷ்ணு, வர்ஷா, இஷா நாயர், கே.பாக்யராஜ், ஜெயப்பிரகாஷ், அர்ஜுன் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.