ஆட்டோக்களை திரையரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும் : விஷால் பேச்சு!

visal7மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது  விஷால் நடிக்கும்    கத்திசண்டை படத்தை  தயாரித்து வருகிறார். படம் வருகிற 23 ம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு நடிக்கிறார் மற்றும் சௌந்தர்ராஜன், மதன்பாப், தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், சின்னி ஜெயயந்த், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள்  நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் விஷால் பேசியதாவது…

”முன்பெல்லாம் திரையரங்குகளில் அதிகமாக ஆடோக்காரர்கள் தான் முதல் காட்சி பார்பார்கள். பார்த்துவிட்டு அவர்கள்  தங்கள் நண்பர்களிடமும் , தங்களது ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளிடமும் படம் நன்றாக இருக்கிறது. தியேட்டரில் போய் பாருங்கள் என்று சொல்வார்கள்.அதை கேட்டு திரையரங்குகளுக்கு கூட்டமும் வரும் படமும் நன்றாக போகும். ஆனால் இப்போது ஆடோக்களை தியேட்டர்களில் அனுமதிப்பதில்லை.

ஆனால் எங்கள் “ கத்திசண்டை “ படம் மூலம் அதற்க்கு ஒரு விடிவுகாலம் பிறக்க உள்ளது. நான்  மற்றும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் இந்த படத்தை வெளியிடும் கேமியே பிலிம்ஸ் ஜெயகுமார்,  படத்தின் இயக்குனர் சுராஜ் ஆகியோர் அனைத்து  திரையரங்க உரிமையாளர்களிடம் கத்திசண்டை படத்திற்கு ஆட்டோக்களை தியேட்டர்களுக்குள் அனுமதிக்குமாறு பேசி வருகிறோம். நிச்சயம் இது நடக்கும் ”என்றார்.

ks-pmஇது தொடர்பாக திரையரங்க உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கையும்  வெளியிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:

என் அன்புமிக்க திரையரங்கு உரிமையாளர்களுக்கு வணக்கம்!                                         

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!

                வருகின்ற டிசம்பர் 23-ஆம் தேதி நான் நடித்த கத்திசண்டை மற்றும் அதைதொடர்ந்து பல புதிய திரைப்படங்கள் வெளிவர இருக்கும் நிலையில் நான் உங்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள் வைக்கின்றேன். தற்பொழுது அனைத்து திரையரங்குகளிலும் ஆட்டோக்களுக்கு பார்க்கிங் செய்வற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது குடும்பதினர்களுடன் படம் பார்க்க வரும்பொழுது அவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பகல் வேலைகளிலும் ஆட்டோ சவாரிகள் இல்லாதபோதும் அவர்கள் படம் பார்பதற்கு திரையரங்குகளுக்கு தான் வருகின்றனர். இதனால் தியேட்டர் அதிபர்களுக்கு வருமானமே தவிர அவர்களால் நட்டம் ஒன்றும் இல்லை. மேலும் ஆட்டோ தொழிலாளர்கள் ஒரு திரைப்படம் வெளியாவதற்கும், அத்திரைப்படம் வெற்றி பெறுவதற்கும் பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகின்றனர். ஆகவே இக்கடிதத்தின் வாயிலாக அனைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன், நமது திரைப்படம் வெற்றியடைவதற்கு உறுதுணையாக உள்ள ஆட்டோக்களை பார்க்கிங் செய்வதற்கு அனுமதி அளித்து ஆட்டோ தொழிலாளர் நண்பர்களுக்கு மனமகிழ்ச்சி தரும்படி பணிவன்புடன் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி…!

இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.