‘ஆயிரத்தில் இருவர்’ விமர்சனம்

பாலச்சந்தரின் சீடரான சரண் இயக்கத்தில், வினய்  இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘ஆயிரத்தில் இருவர்’.ஒரே ஒருவம் கொண்டஇரட்டையர் பற்றிய ஆள்  ஆள்மாறாட்டம்  ரகக் கதைதான் இது .

செந்தட்டிக்காளை, செவத்தக்காளை என்ற இரட்டை பிறப்புக்களான வினய்கள், தாயின் கருவில் இருக்கும்போதே நீயா? நானா? என்று போட்டிக்கொண்டு பிறக்கிறார்கள். வளரும் போதும்  மோதலுடனே வளர்கிறார்கள். 

தொடர்ந்து வரும் பங்காளிப்பகையால் பயந்து போய் பிரித்து வளர்க்கப்படுகிறார்கள்.

 அம்மாவிடம் ஒரு வினய், அப்பாவிடம் ஒரு வினய் என்று வளரும் வினய்கள், வளர்ந்து பெரியவர்களானவுடன் காதல் கசமுசா என்று இருப்பதோடு, தனது குடும்ப சொத்தை கைப்பற்றவும் நினைக்கிறார்கள். செந்தட்டிக்காளை உயிரோடு இருப்பது தெரியாமல் சொத்து அனைத்தையும் தனது பெயருக்கு மாற்றம் செய்ய செவத்தக்காளை முயற்சிக்க, அந்த செவத்தக்காளையை தனது சூழ்ச்சியின் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் செந்தட்டிக்காளை, இன்னொருவராக  வந்து சொத்துகளை அபேஸ் செய்ய திட்டம் போடுகிறார். 

தங்களுக்குள்ளேயே கொலைவெறியுடன் மோதிக்கொள்ளும் இந்த இரட்டை சகோதர்களுக்கு, எதிராக மேலும் பல பிரச்சினைகள் கிளம்ப, அவற்றில் இவர்கள் சிக்கி சிதைந்தார்களா?  திருந்தினார்களா? என்பதே ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தின் மீதிக்கதை.

இரட்டை வேடம் சார்ந்த படத்தின் கதை என்றாலும், அதற்கு சரண் அமைத்திருக்கும் திரைக்கதையும், கிளைக்கதைகளும் படத்தை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.

சாக்லெட் பாயாக இருந்த வினய், இந்த படத்தில் நெல்லை தமிழ் பேசும் இளைஞராக வலம் வருகிறார். வேஷ்ட்டி, சட்டை என்று கிராமத்து கதைக்கு சற்று பொருந்தி வருகிறார். மீசை இல்லாமல் இருப்பது கதாபாத்திரத்திற்கு சற்று ஒட்டாமல் போகிறது. 

சாமுத்ரிகா, ஸ்வஸ்திகா என்று இரண்டு  நாயகிகளும் பார்க்க அழகாக இருப்பதோடு, பாடல் காட்சிகளில் ரசிகர்களின் கண்களை குளிர்ச்சியாக்கிவிடுகிறார்கள். ரெட்டியாக வரும் அந்த நடிகை கவர்ச்சியில் படு சுட்டி.சுருட்டு லேடியாக வரும் காஜல் பசுபதியின் வேடமும், அவரை காதலிக்கும் மதுரை ரவுடி அருள்தாஸ் மற்றும் அவரது அடியாட்கள் கூட்டமும், காமெடி.

சரண் – பரத்வாஜ் கூட்டணியில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகும். ஆனால், இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம்தான்.

ஒரு படத்திற்குள் பல கதைகளை இயக்குநர் கையாண்டுள்ளார் சரண்.

ஆக்‌ஷன் மூடில் தொடங்கும் படம், கொஞ்சம் கொஞ்சமாக காமெடி  நிலைக்கு மாறி, இறுதியில் நூறு சதவித காமெடிப்படமாகவே முடிந்துவிடுகிறது.

மொத்தத்தில் இந்த ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தை இன்னமும் எதிர்பார்த்தோம்.சரண் தயாரிப்பாளர் ஆனதால் ஏற்பட்ட நெருக்கடியை உணர முடிகிறது.

Pin It

Comments are closed.