இசையால் நாங்கள் இணைந்தோம் – ‘வானவில் வாழ்க்கை’ ஜிதின் ராஜ்

jithin1உலகளாவிய அளவில் யாரையும் எளிதில் கவரக்கூடிய ஓர் விஷயம் இசை. அப்படிப்பட்ட இசைக்கு இசைவது இன்பமே. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் ‘வானவில் வாழ்க்கை’ மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் பாடகர் ஜிதின் ராஜ்.

“ அங்குமிங்குமென பல்வேறு இசைகளைக் கேட்டு வளர்ந்தேன் .கர்னாடக சங்கீத அடிப்படைகளைக் கற்று தேர்ந்துள்ளேன். பள்ளி நாட்களில் இருந்தே பல இசை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளேன். கல்லூரிப் படிப்பை முடித்ததும் தொலைகாட்சி ரியால்டி இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளேன். இது எனக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பினை தந்தது. “

“எனது பல நிகழ்ச்சிகளை பார்த்திருந்த ஜேம்ஸ் வசந்தன் சாருக்கு என்னை மிகவும் பிடித்திருந்தது. பின்னர் இரண்டு மாதங்கள் நடிப்பு, வசனம், நடனம் என தீவிர பயிற்சியில் ஈடுபட்டோம். படம் என்னவோ இசைதான் என்றாலும் படம் முழுக்க எங்களுக்குள் போட்டிதான், ஒருவரை ஒருவர் முந்த வேண்டும் என ஜேம்ஸ் வசந்தன் சார் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார். எங்கள் வாழ்க்கையில் இந்த படம் வானவில்லை போல பல வண்ணங்களை வீசும்.அனைவரின் கல்லூரி வாழ்க்கையையும் நினைவுக்கு கொண்டு வரும் இந்த வானவில் வாழ்க்கை. “ இந்த மாதம் 10ஆம் தேதி அதாவது நாளை ‘வானவில் வாழ்க்கை’ படத்தின் இசை வெளியாகிறது.