இது ஷங்கர் சார் படமா: ஆடை வடிவமைப்பாளர் தமிழ்ச்செல்வன்

art-dr-kappalஇயக்குநர் ஷங்கர் வெளியீட்டில் வரும் டிசம்பர் 25ஆம் தேதி வெளிவரவுள்ளது ‘கப்பல்’. ஆடை வடிவமைப்பாளர் தமிழ்ச் செல்வன் இப்படத்தில் பணி புரிந்த அனுபவத்தைப் பற்றி கூறிய போது “ இப்படம் எனக்கு சிறந்த அனுபவங்களை பெற்று தந்தது. இயக்குநர் கார்த்திக் இந்த படத்தில் வரும் அனைத்து ஆடைகளுமே வண்ணமயமாகவும், பாடல்காட்சிகளில் வரும் ஆடைகள் சிறு கதைகளைக் கொண்டதாய் அமைய வேண்டும் என்று எண்ணினார். அதற்கேற்ப பாரம்பரிய, மேற்கத்திய, பிரமிப்பூட்டும் பல ஆடைகள் வடிவமைக்கப்பட்டன.” என்றார்.

சென்னையில் ஆடை வடிவமைப்பாளர் படிப்பினை முடித்த பின்பு சொந்தமாக  ஃபேஷன் டிசைன் நிறுவனத்தை தொடங்கியவர் , பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைத்தார். “காதல் காசாட்டா… பாடலிற்கு முழுக்க முழுக்க சாக்லேட்டுகளாலான ஆடைகளை வடிவமைத்தேன். இதற்கான வேலைகளை என் முழு குடும்பமே செய்தது. பின் பூக்களால் தைக்கபட்ட ஒரு ஆடையும் மிகவும் சவால் நிறைந்ததாய் அமைந்தது. பஞ்ச பாண்டவர்கள் வேஷதிற்காக ஆடைகள் வடிவமைக்கும்பொழுது நிறைய வேலைப்பாடுகள் மேற்கொள்ள நேர்ந்தது” என்றார்.

KAPPAL-adr“ஒரு நாள் ஷூட்டிங்கில் பல வகை காஸ்டியும்களைப் பார்த்த எனது உதவியாளர், இவ்வளவு காஸ்டியும்ஸ் இருக்கே இது ஷங்கர் சார் படமா என்ன என்று கேட்டார். அப்போது நாங்கள் நினைக்கவில்லை  படம் அவரது தயாரிப்பாக வெளி வரும் என்று. அறிமுக கலைஞரான எனக்கு வேறென்ன பெருமை வேண்டும்? என்றார்.கதாநாயகி சோனம் பஜ்வா நான் வடிவமைத்த உடைகள் பாலிவுட் தரத்தில் இருப்பதாக கூறினார். அந்த உடைகள் அவரை ஒரு கடல் கன்னி போல் அழகாகக் காட்டும் ‘ என கூறினார் தமிழ் செல்வன்.