இரண்டரை லட்சம் ஹிட்டடித்த ‘சென்னை 28 – II’ பாடல் டீசர்!

Yuvan_Shankar_Rajaஒரு பாடலுக்கு இசை மூலமாகவும், குரல் மூலமாகவும் உயிர் கொடுக்க முடியும் என்பதை உணர்த்தும் ஒரு இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா. கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி ‘டூப்பாடூ’ இசைத்  தளத்தினால் சமூக வலைத்தளங்களில்  வெளியான  ‘சென்னை 28 – II’ படத்தின் ‘தி பாய்ஸ் ஆர் பாக்’ பாடலின் டீசரே அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
வெங்கட் பிரபு – யுவன்ஷங்கர் ராஜா கூட்டணிக்கு எப்போதுமே தமிழக ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்தி இருக்கின்றது இந்த ‘சென்னை 28 – II’ படத்தின் ‘தி பாய்ஸ் ஆர் பாக்’ பாடலின் டீசர். ‘  ‘யூடூப்பில்’  இரண்டரை லட்சம் பார்வையாளர்களை எட்டி இருக்கும்  இந்த ஒரு நிமிட  டீசரானது, தற்போது  சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டு வருகிறது. “வரோம் சொல்லு, தள்ளி நில்லு, மச்சி இது நம்ம பிச்சு கிழிச்சிடலாம்…” என்ற வரிகளில் ஆரம்பமாகும்  ‘தி பாய்ஸ் ஆர் பாக்’ பாடலின் டீசரானது, ‘சென்னை 28’ படத்தின் கிரிக்கெட் களத்தை நம்  கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. ஹிப் – ஹாப் பாணியில் உருவாகியிருக்கும் இந்த பாடலை யுவன்ஷங்கர் ராஜா பாடியிருப்பது மேலும் சிறப்பு. ‘தி பாய்ஸ் ஆர் பாக்’ பாடலின் டீசர் மூலம்   தரமான சிக்ஸரை வெங்கட் பிரபு அடித்து இருக்கிறார் என்பதை உறுதியாக சொல்லலாம்.

“சென்னை 28 – II’ படத்தின் ஆடியோ பார்ட்னராக செயல்படுவது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது…ரசிகர்களிடம் இந்த டீசர் அமோக வரவேற்பை பெற்று வருவதை பார்க்கும் பொழுது அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது” என்று கூறுகிறார் ‘டூப்பாடூ இசைத்தளத்தின் நிறுவனர் கௌந்தேயா. “சென்னை 28 – II’  படத்திற்கு ஆடியோ பார்ட்னராக ‘டூப்பாடூ’ செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.