இரு மொழிகளில் தயாராகும் “கட்டில்” திரைப்படம்


இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் ‘கட்டில்’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 
சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் தமிழகத்தின் பல்துறை சார்ந்த பிரபலங்களும் நடிகர்களாக அறிமுகமாகிறார்கள்.

 
மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் கட்டில் திரைப்படம் மலையாளத்திலும் “கட்டில்” என்ற பெயரிலேயே எடுக்கப்படுகிறது. இந்திய கலாச்சாரத்தின் பல்வேறு அடையாளங்களை இத்திரைப்படம் வெளிப்படுத்துவதால் மற்ற இந்திய மொழிகளிலும் கட்டில் உருவாவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.        


மர்ம தேசத்தின் மூலம் உலக தமிழர்களால் அறியப்பட்ட பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.  தமிழகத்தின் முன்னணி ஓவியரான ஷ்யாம் கதாநாயகனுக்கு அண்ணனாக கட்டிலில் களமிறங்கி இருக்கிறார். இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம் உட்பட பல பிரபலங்கள் கட்டிலின் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார்கள்.   
பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம், எடிட்டிங் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றிருக்கிறார். வைட்ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
“மெட்டிஒலி” சாந்தி நடனம் அமைத்திருக்கிறார்.
பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Pin It

Comments are closed.