‘இலை’ விமர்சனம்

ilai-hnநாயகன் ,நாயகி பிம்பங்கள் இலலை.மிகைப் படுத்தப் பட்ட காட்சிகள் இல்லை, பஞ்ச் வசனங்கள் இல்லை,  பரபரப்பு ஆக்ஷன் இல்லை, , சொறித்தனமான காமெடிகள் இல்லை, ஆபாச நடனங்கள்இல்லை, அருவருப்பான காட்சிகள் இல்லை, ஏன் டூயட்பாடல் கூட இல்லை .இபபடி  எவ்வித வணிக ஒபபனையும்  இலலாமல்  நலலதொரு கதையுடன் ஒரு படம் வந்திருக்கிறது. அதுதான் ‘இலை’. இப்படத்தை பினீஷ் ராஜ் இயக்கியுள்ளார். லீஃப்  புரொடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது.

1990 களில் நடக்கிற கதை. பெண்களைப் படிக்க வைக்க விரும்பாத ஒரு சமூகச் சூழலிலிருந்து ஆர்வமுள்ள ஒரு பெண் படிக்க எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சந்திக்கும் போராட்டங்களும்தான் கதை.

அப்பாவோ மகளைப் படிக்க வைக்க விரும்புகிறார். அம்மாவோ விரும்ப வில்லை, முரடனான தன் தம்பிக்குத் திருமணம் செய்து வைத்து விட்டால் போதும் என நினைக்கிறாள். நாயகி ‘இலை’யின் வகுப்பில் படிக்கும் இன்னொரு மாணவி பணக்கார வீட்டுபெண். இலை படிபபில் முதல் மதிப் பெண் எடுக்க கூடாது என்றும் தேர்வுக்கு வரக்கூடாது என்றும் சதிவலை பின்னுகிறாள். இப்படிப் பல்வேறு தடைகளை மீறி இலை தேர்வு எழுதினாளா இல்லையா என்பதே க்ளைமாக்ஸ் நோக்கிய கதையின் பயணம்.

படம் ஆரம்பித்ததுமே இது வேறு வகையான படம் என்று தெரிந்து விடுகிறது. எனவே வழக்கமான வணிக சினிமா எதிர்பார்ப்பை ஓரங்கட்டி விட்டு கதைக்குள் நுழைந்து விடுகிறோம்.அதன் யதார்த்தமான போக்கில் பயணப்பட்டு விடுகிறோம்.அதற்காகப் படம் போரடிக்கவும் இல்லை. மெல்லிய பதற்றத்துடன் ஒரு விறுவிறுப்பு இருக்கவே செய்கிறது.

படத்தில் வரும் அத்தனை பாத்திரங்களும் மிகச் சரியான தேர்வு.  ‘பாத்திரம் அறிந்து
பிச்சையிட்டுள்ளார் இயககுநர்.எதிர் நாயகனாக சுஜீத் ஸ்டெபானோஸ் நடித்துள்ளார். கன்னட நடிகர் கிங்மோகன் . மலையாள நடிகை ஸ்ரீதேவி  , ஷைன் குருக்கள், விஜு பிரகாஷ் , கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம்.  காவ்யா நடித்துள்ளார்கள். இபபடி நடிததவர்களும் உணர்ந்து நடித்துள்ளனர்.

ஆனால் இலை பாத்திரத்தில் நடித்து முழுப்படத்தையும் தன்  தோளில் தூக்கிச் சுமந்திருப்பது ஸ்வாதி நாராயணன் தான்.மறறவர் நடிப்பையெலலாம் ஸ்வாஹா  செய்துவிடடார் ஸ்வாதி .. சபாஷ்!

ப்ரியாமணி போன்ற தோற்றம். அவர் போலவே விருதும் பெற்று விடுவார்.

படம் முழுக்க ஸ்வாதி, தன் படிப்புக்காகப் போராடும் மாணவியாக விஸ்வரூபம் எடுத்து விடுகிறார். ஓடுகிறார் ..ஓடுகிறார் ஓடிக் கொண்டே இருக்கிறார்.மலை காடு, வயல், வரப்பு, சாலை, ஒற்றையடிப் பாதை என ஓடிக் கொண்டே இருக்கிறார் .இப்படி பத்து கி.மீ தூரமாவது படத்திற்காக ஓடியிருப்பார் போலும்.ilai2

ஒளிப்பதிவு – சந்தோஷ் அஞ்சல். ஷாட்டை வைடு ஆங்கிளில் ஆரம்பித்து அவர் செய்துள்ள அழகு.. கதையின் அவலம் மறந்து ரசிக்க வைக்கிறது. படத்தில்வரும் பின்னணிக் காட்சிகளையும் பாத்திரங்கள் போல் உணரவைத்துள்ளார்.

விஷ்ணு வி. திவாகர னின் இசையும் படத்திற்கு கலாபூர்வ உணர்வைத் தந்துள்ளது. விஷூவல் எஃபெக்டில் பல காட்சிகள் செதுக்கப் பட்டுள்ளன. அதைபபார்ததால் உலகத்தர தொழில் நுட்பத்தில் உள்ளூர் கதை சொல்லப் பட்டுள்ளது எனலாம்.நல்லதொரு கதையுடன் தொழில்நுட்ப ஆச்சரியங்களும் இணைந்து இப்படம் உருவாக்கப் பட்டுள்ளது.

என்னதான் விஷூவல் எஃபெக்ட்ஸ் இருந்தாலும் கதையின் இயல்பு கெடாது அர்த்த முள்ள வசனங்களையும் எழுதியுள்ளார் ஆர்.வேலுமணி.

ilai44ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதன் தன்மை கெடாமல் செயற்கைப் பூச்சு இல்லாமல் அதன் போக்கில்  நகர்த்திப் படமாக்கியுள்ள இயககுநருககுச் சபாஷ் போடலாம். இந்த மலையாளப் படக்குழுவின்  முயற்சியைப் பாராட்ட வேண்டும்.

பாராட்ட வேண்டாம் என்பவர்கள் மலிவான ரசனை உணர்ச்சியில் விமர்சிக்காமல் இருப்பது நலம். ஏனென்றால் சாராய அடிமைகளுக்கு நல்லது என்று தெரிந்தும் இளநீர் பிடிப்பதில்லை.