இளையராஜாவின் 1001வது படம் ‘​களத்தூர் கிராமம் ‘ எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மகன் நடிக்கிறார்!

IMG_0253 இளையராஜாவின்  1001வது படம் ‘​களத்தூர் கிராமம் ‘ இதில் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மகன் நாயகனாக நடிக்கிறார்!

ரஜினி கமல் ஸ்ரீதேவி மற்றும் இயக்குநர் பாரதிராஜா கூட்டணியில்1977 ல் வெளிவந்து அனைத்து தமிழ் ரசிகர்களாலும் இன்றளவும் பேசப்படுகின்ற படம் ’16 வயதினிலே ‘.இத் திரைப்படத்தை தயாரித்த எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின்  மகன் மிதுன் குமார்    நடிக்க வந்துள்ளார்.  ‘ ​களத்தூர் கிராமம்’ என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.மிதுன் குமார் இயக்குநர் மகிழ்திருமேனியிடம்  ‘தடையற தாக்க ‘படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிவர். அதனைத் தொடர்ந்து  16 வயதினிலே டிஜிட்டல் பதிப்பின் இயக்குநராகவும் பணியாற்றினார்.

இந்த களத்தூர் கிராமம் படத்தை சரன்கே அத்வைதன் இயக்குகிறார்.இவர் சின்னதாய் புகழ் கணேஷ் ராஜி டம் இணை இயக்குநராய் பணியாற்றியவர்.இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஜமீன் ஜாம்,படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ்,இசை இசைஞானி  இளையராஜா.இசைஞானிக்கு இது 1001வது படமாகும்.இப்படத்தில் ஆடுகளம் கிஷோர்,ஏக்னா செட்டி, ரஜினி மகா தேவய்யா,தருண் சத்ரியா மற்றும் முன்னணி கன்னட நடிகர்கள் நடிக்கிறார்கள்.இப்படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளிவரவுள்ளது.முதல் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.இரண்டாம் கட்ட படப்பிடிப்பை விரைவில் நடத்தவுள்ளனர்.இப்படத்தை ஏ.ஆர்.மூவி பாரடைஸ் சீனு ராஜ்  தயாரிக்கிறார் அவருடன்  சேர்ந்து ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவும்  இணைதயாரிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.