‘உச்சக்கட்டம்’ விமர்சனம்

 

எண்பதுகளில்  ‘உச்சக்கட்டம்’ பெயரில் வந்து பரபரப்பூட்டியது ஒரு  படம் .அதே பெயரில் இப்போது ,சாய் தன்ஷிகா நடிப்பில் சஸ்பென்ஸ் திரில்லர்  படமாக வெளியாகியிருக்கிறது.

காதலருடன் ஓட்டல் ஒன்றில் தங்கும் தன்ஷிகா, அங்கு நடக்கும் கொலையை தனது செல்போனின் வீடியோ எடுத்து விடுகிறார். அதை பார்க்கும் கொலையாளிகள் தன்ஷிகாவை துரத்துவதோடு, அவரது காதலர் நாயகன் தாக்கூர் அனூப் சிங்கையும் சிறை பிடித்துவிடுகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் தாக்கூர் அனூப், தன்ஷிகாவை தேடி செல்ல, தன்ஷிகா வில்லன்களிடம் சிக்கிக் கொள்கிறார்.  தன்ஷிகாவை மீட்க தாக்கூர் அனூப் போராட, மறுபக்கம்  கொலை பற்றி போலீஸ் விசாரணையை தொடங்க, தாக்கூர் தன்ஷிகாவை மீட்டாரா இல்லையா, ஓட்டலில் நடந்த கொலையின் பின்னணி என்ன என்பது தான் ‘உச்சக்கட்டம்’ படத்தின் கதை.

சஸ்பென்ஸ் திரில்லர் படங்களுக்கான இமேஜையும், லாஜிக்கையும் பார்க்காமல், முழுக்க முழுக்க மசாலாப் படமாகவே இப்படத்தின் திரைக்கதையையும், காட்சிகளையும் இயக்குநர் சுனில் குமார் தேசாய் வடிவமைத்திருக்கிறார்.ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம் எப்படி இருக்க கூடாது, என்பதற்கான உதாரண  படம்தான் இந்த ‘உச்சக்கட்டம்’

‘சிங்கம் 3’ யில் வில்லனாக நடித்த தாக்கூர் அனூப் சிங் தான் படத்தின் நாயகன்.  படம் முழுவதும் அவருக்கு ஆக்‌ஷன் காட்சிகள் தான். ஒன்று இரண்டு இடத்தில் ஆங்கிலம் கலந்த தமிழ் வசனம் பேசுபவர், பெரும்பாலான இடங்களில் டமால்…டுமீல்…,என்று சண்டைப் போடுவதையே வேலையாக வைத்திருக்கிறார்.

நாயகி  சாய் தன்ஷிகா, செல்போனில் படம் பிடிப்பது, பதுங்குவது பிறகு வில்லன்களிடம் சிக்கிக் கொள்வது, தப்பிக்க முயல்வது என்று அழுகையும், அலறுலுமாகவே நடித்திருக்கிறார்.

இசையைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோரை விட ஆக்‌ஷன் இயக்குநருக்கு தான் படத்தில் அதிக வேலை, அந்த வேலையை அவர் சரியாகவே செய்திருக்கிறார் .

இயக்குநர் சுனில் குமார் தேசாய், சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்ற பெயரில்,கற்பழிப்பு விஷயத்தை கருவாக வைத்து எடுத்திருக்கும் இப்படத்தின், மூலம் ரசிகர்களை கசக்கி பிழிந்துவிடுகிறார். 

மொத்தத்தில், ‘உச்சக்கட்டம்’  மிகையான மசாலாப் படம்.

Pin It

Comments are closed.