கமல் விழாவில் பார்த்திபனின் அசட்டுத்தனங்கள்!

RAM_9611உத்தமவில்லன் இசை வெளியீட்டுவிழாவில் பல அம்சங்கள் உணர்வு பூர்வமாக இருந்தன.

பாலசந்தர் பற்றிய குரு சிஷ்யன் உறவு  பற்றிய கமல் பேச்சு, மகன் மருத்துவ மனையில் இருந்த போதும் மனமாற்றத்துக்காக  நடிக்க வந்த நாசரின் நெகிழ்ச்சி அனுபவம், பேராசிரியர் ஞானசம்பந்தன், சுப்பு ஆறுமுகம்  ஆகியோரின் பேச்சு போன்றவை  எல்லாம் அப்படி உணர்வு பூர்வமாக இருந்தன.

ஆனால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பார்த்திபன் படுத்திய பாட்டைத்தான் தாங்க முடியவில்லை. பார்த்திபன் அவ்வப்போது புதுமைகள் செய்பவர்தான். புதுமைகள் பேசுபவர்தான் ஆனால் அவர் செய்வது பேசுவது எல்லாமே புதுமை என்று அவர்  நினைத்துக் கொண்டிருக்கிறார். அதுதான் பாவமாக இருக்கிறது.

தொகுப்பில் அவர் சொல்லிய வர்ணனையை விட ‘ஜொள்ளிய ‘வர்ணனைகள்தான் அதிகம். புதுமை என்கிற பெயரில் மேடைக்கு வந்தவர்களிடம் எரிச்சலூட்டும் கேள்விகளைக் கேட்டு நெளியவைத்தார். பெண்மயப்படுத்தியே பலரிடம் பேசினார் .விழாவில் பார்த்திபன்   அறிவாளித்தனமாக நினைத்துப்பேசிய பலவும் அசட்டுத்தனங்கள்!

பார்வதியை பாடாவதியா என்றார். பூஜாகுமாரை இவ்வளவு அழகை வைத்துக் கொண்டு ஒண்டியா என்ன செய்கிறீர்கள் என்றார்.மேல் ஸ்தாயி வாய்ஸ் male வாய்ஸ் எல்லாம் அரதப் பழசு .தாறு மாறாக இப்படிக் கேட்டதும்  பார்வதி நாயர்,ஆண்ட்ரியா எல்லாம் எரிச்சலில் முகம் மாறினார்கள்.

இப்படி அவர் ஜாலிஎன்று பேசியதெல்லாம் கேலியாகவே இருந்தன. கமல் பற்றி பேச எவ்வளவோ இருக்க முத்தம் பற்றியே சத்தம் போட்டுக் கொண்டு இருந்தார். கமல் என்னும் கடலை இப்படி முத்தத்தில் அடக்குவது சரியா?

போதாதென்று முத்தம்  பற்றி நடிகைகளிடம் கேள்வி கேட்டு வேறு கொன்றார்.

நடிகைகளிடம் அவர் வழிந்த அசடுக்கு அளவே இல்லை. அதை வீடியோவிலேயே பார்க்கலாம்.

FUN  என்று நினைத்தும்,PUN  என்று நினைதும் தான்  செய்தவை   எல்லாம் BUN போல மிருதுவாக இல்லையே  அடுத்தவரை BURN செய்வதாகவே இருந்தன .அல்லது  BAN செய்யத்தக்கதாகவே  இருந்தன என்பதை  உணர்வாரா பார்த்திபன்   ?RAM_9611

-கபாலி