‘உப்பு கருவாடு’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

uppukaruvadu.fdஇயக்குநர் ராதா மோகன்  இயக்கத்தில் தயாராகி வரும் ‘உப்பு கருவாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. First Copy Pictures மற்றும் Night Show cinema தயாரிப்பில்  கருணாகரன், நந்திதா ஆகியோர் நடித்துள்ளார்கள். பொழுதுபோக்கு திரைப்படமாய் வளர்ந்து வரும் இப்படம ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஒரு படமாய் மாறியுள்ளது.

“ தேர்ந்த பல படங்களை தந்து வரும் இயக்குநர் ராதா மோகன், மீண்டும் ஒரு அழகிய படத்தை எடுத்துள்ளார். நடிகர்கள் , தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும்  திறமையான உழைப்பை வழங்கி படத்தை குறித்த காலத்தில் முடிக்க உதவியுள்ளனர். ‘உப்பு கருவாடு’ குழுவினருக்கு எனது நன்றிகள். படத்தின் இறுதிகட்ட வேலைகள் மிக வேகமாய் நடந்து வருகிறது. விரைவில் ரசிகர்கள் சுவைக்க தயாராகிறது ‘உப்பு கருவாடு’.” என மகிழ்ச்சியுடன் கூறினார் படத்தின் தயாரிப்பாளர் ராம்ஜி நரசிம்மன்.