ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் கூடிக் கும்மியடிக்கும் ‘கககபோ ‘.

kakakapo-2 டி என் எஸ் மூவி புரடக்ஷன் சார்பில் மலேசியாவை சேர்ந்த செல்வி சங்கரலிங்கம் என்பவர் தயாரிக்கும்.

அதிகமான நகைச்சுவை நடிகர்கள் நடிக்கும் ‘கககபோ ‘.

முழுவதும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட நகைச்சுவை நடிகர்கள் நடிக்கும் திரைப்படம் ‘கககபோ’. இதில் நாயகனாக புதுமுகம் கேஷவ் அறிமுகமாகிறார்.நாயகியாக சாக்ஷி அகர்வால்  நடிக்கிறார்.இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாஸ், பஞ்சு சுப்பு,பவர் ஸ்டார்,சிங்கம்புலி,ரோபோ ஷங்கர்,மயில் சாமி,வி.எஸ்.ராகவன்,சாண்டி (மானாட மயிலாட),ஜாக்குவார் தங்கம்,மதன் பாபு,நிரோஷா,வடிவுக்கரசி,ஆதவன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.இதன் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது

இப்படத்தின் இசையை வரும் ஜனவரியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறுகிறார் இயக்குநர் பி.எஸ்.விஜய்.

இதில் அனைத்து பாடல்களையும் மிக சிறப்பாக கொடுத்துள்ளாராம் பி.சி.சிவன் குறிப்பாக கானா பாலாவின் பாடல் அடுத்த வருடத்தின் சிறந்த பாடல் வரிசையில் இடம் பெறும் என்கிறார்.