ஐரோப்பா செல்லும் நாகார்ஜுனா-கார்த்தி-தமன்னா!

karthiபி வி பி  சினிமா நிறுவனத்தினர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களைத் தயாரித்து வருகின்றனர். அதில் நாகார்ஜுனா- கார்த்தி= தமன்னா நடிக்க , வம்ஷி இயக்கத்தில் , ஒளிபதிவாளர் பி எஸ் வினோத் இயக்கத்தில் ஏராளமான பொருட் செலவில் உருவாகும் படத்தின் படப்பிடிப்புக்காக ஐரோப்பா செல்ல உள்ளனர்.

தென்னிந்திய  மொழிகளில்  தயாராகும் படங்களில் இதுவரை எந்த படப்பிடிப்பு குழுவினரும் சென்றிராத செர்பியா நாட்டின் தலை நகரமான பெல்கிரேட்  நகரத்தில் படமாக்கப் படுகிறது. பெல்கிரேட் நகரத்துக்கு பிறகு  பிரான்ஸ்  நாட்டின் பாரிஸ்  நகரத்திலும் லயோன் நகரத்திலும் படமாக்க பட உள்ளது. பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின்  படப்பிடிப்பு 30 நாட்கள் தொடர்ந்து நடக்க உள்ளது. இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு பிறகு படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்து  விடும். எழில் கொஞ்சும் அந்த நாடுகளின் இயற்கை காட்சிகளை ஒளிப்பதிவாளர்  பி எஸ்  வினோத் படம் பிடிக்க உள்ளார். அங்கு படமாக்க படும் சண்டைக் காட்சிகள் மற்றும் கார் சேசிங் காட்சிகள் இந்திய திரை உலகம்  இதுவரை கண்டிராத சண்டைக் காட்சிகளாகும் என்று இயக்குநர்  வம்ஷி உறுதி கூறினார்.

கோபி சுந்தரின் உன்னதமான இசை படத்துக்கு மேலும் வலு சேர்க்கும்.அந்த பாடல் காட்சிகளும் இங்கேயே படமாக்கபடுவதுக் குறிப்பிடத்தக்கது. பெரும் பகுதிகள்  இங்கே  படமாக்க பட்ட பிறகு பெயரிடபடாத இந்த படம் இந்த வருடம் இறுதியில்  வெளியாகும் .