ஒருதவறான செல்போன் அழைப்பால் நிகழும் பிரச்சினையே ‘பந்து’ படம்!

133தவறுதலான செல்போன் அழைப்புகள் அதிகமாகிக்கொண்டிருக்கும் இன்றையகாலகட்டத்தில், அப்படிஒருதவறான அழைப்பால் நிகழும் பிரச்சனையில் எதிர்பாராத விதமாக மாட்டிக்கொள்ளும் ஹீரோவின் வாழ்க்கை காவல்துறையின் தவறான நடவடிக்கையால் எப்படி பந்தாடப்படுகிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையால் சொல்லும் படம்தான் இந்தப் ‘பந்து’.

இப்படத்தில் அறிமுக நாயகனாக பிரதாப் நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக அன்ஷிபா நடித்திருக்கிறார். இவர் மலையாளத்தில் ஹிட்டாகி வசூலை வாரிக்குவித்த ‘திருஷ்யம்’ படத்தி ல் மோகன்லாலுக்கு மகளாகநடித்தவர்.

மேலும் தமிழிலும் ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘நாகராஜசோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ’ ஆகிய படங்களிலும் ஹீரோயினாக நடித்தவர்.

இவர்களுடன் பல புதுமுகங்களும் நடித்திருக்கும் இப்படத்தை ஜெயபாலகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

நந்தா இசையமைத்திருக்கிறார். எஸ்.பி.முத்துப்பாண்டியன் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களை பத்மாவதி எழுதியிருக்கிறார். எடிட்டிங்கை மீனாட்சிசுந்தர் கவனிக்க, சூர்யமகேஷ் ஸ்டண்ட்காட்சிகளை அமைத்திருக்கிறார்.படப்பிடிப்பு,தொழில்நுட்பவேலைகள்எல்லாம்முடிந்துள்ளஇப்படம்விரைவில் திரைக்குவருகிறது.