‘கசடதபற’ விமர்சனம்

நடிகர்கள்: சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், சாந்தனு, ரெஜினா கஸண்ட்ரா, ப்ரியா பவானிசங்கர், விஜயலட்சுமி, ப்ரேம்ஜி, வெங்கட் பிரபு, யூகி சேது.

சிம்புதேவன் இயக்கியிருக்கும் கசடதபற படம், மொத்தம் ஆறு கதைகள் கொண்டது. பலமுனைகளில் ஆரம்பிக்கும் கதைகள் இறுதியில் இணைகின்றன.பல தனித்தனி கதை போலக் காட்சியளித்தாலும், ஒரு முழு நீளத் திரைப்படமாகவே விரிகிறது. இந்த ஆறு கதைகளும் ஆறு விதமாக ஆரம்பித்து இறுதியில் மைய இழையை உணர வைக்கின்றன.இப்படம் OTT யில் வெளியாகிறது.

பாத்திரங்கள் ஒவ்வொன்றின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களும் மற்றொரு பாத்திரத்தின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தனித்தனிக் கதைகளாக துவங்கினாலும் அவற்றை ஏதோ ஒரு பாத்திரமோ, சம்பவமோ ஒன்றாக இணைத்துவிடுகிறது. இதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பிரச்சினைகள் எப்படித் தீர்கின்றன என்பதே கதை.

இந்த ஆறு கதைகளிலும் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் படத்தைத் தொடர்ந்து சுவாரஸ்யமாக எடுத்துச் செல்கின்றன.

ஒட்டுமொத்த படத்திலும் வெங்கட் பிரபு, சிஜா ரோஸ், விஜயலட்சுமி, சந்தீப் கிஷன் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசை, ஒளிப்பதிவு ஆகியவற்றை ஒவ்வொரு கதைக்கும் வெவ்வேறு கலைஞர்கள் பொறுப்பேற்று சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

சிம்புதேவன் இந்த சோதனை முயற்சியையும் சிறப்பாகச் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்.

எடுத்துக்கொண்ட கதைக்கேற்ப நடிகர்களிடம் அவர்களின் சிறப்பான நடிப்பை வெளிக்கொணர வைத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர்.

காட்சிக்கேற்ற வசனங்களில் நடப்பு அரசியலையும் நாட்டு நடப்பையும் எதிரொலிக்கிறார் இயக்குநர்.

இசை: யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், கிப்ரான், ப்ரேம்ஜி, சாம் சிஎஸ், ஷான் ரோல்டன்; ஒளிப்பதிவு: எம்.எஸ். பிரபு, விஜய் மில்டன், பாலசுப்ரமணியெம், ஆர்.டி. ராஜசேகர், சக்தி சரவணன், எஸ்.ஆர். கதிர் என இணைந்துள்ளனர்.ஒவ்வொரு பாகத்திற்கும் தனித்தனி தொழில்நுட்பக் கூட்டணி அமைத்து இணைத்து வெற்றி பெற்றுள்ளார் சிம்புதேவன்.

தனது பிளாக் டிக்கெட் நிறுவனத்தின் மூலம் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார் வெங்கட் பிரபு.முதன் முதலில் நடிப்பதற்காக வந்தவர்தான் வெங்கட்பிரபு .பிறகு இயக்குநர் ஆகிவிட்டார். இந்த படத்தின் மூலம் நல்ல நடிகராகவும் நல்ல தயாரிப்பாளராகவும் பளிச்சிடுகிறார்.