கடற்கரையில் ஒரு திரைக்கதை!

iniya4கடற்கரையில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாகும் படம் தான் ‘கரையோரம்’ இதன் தொடக்கவிழா ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

படத்தின் ஊடக சந்திப்பு க்ரீன்பார்க் ஓட்டலில் நடந்தது. அப்போது வெளிப்பட்ட தகவல்கள். தமிழ்ப்படத்தில் இதற்காகவே முதன்முதலாக சோனி 8 கே ரெசில்யூஷன் கொண்ட கேமரா பயன் படுத்தப்படவுள்ளது.

படத்தின் நாயகன் வசிஷ்டா, ஏற்கெனவே இவர் கன்னடத்தில் 9 படங்கள் முடித்தவர். மாறுபட்ட இக்கதை கவர்ந்து தமிழில் நடிக்கிற இவர், தனக்கு தமிழ்த் திரைஉலகம் ,திரைப்படங்கள்மீது தனி மதிப்புண்டு என்றவர், படத்தில் நடிப்பதற்கு தமிழை அழகாக பேசவும் கற்றுக் கொண்டாராம்.

ஒரு நாயகி நிகிஷா படேல் இவர் வசிஷ்டா ஜோடி, இன்னொரு நாயகன் கணேஷ் பிரசாத்தின் ஜோடி இனியா. ஆமாம் பேய்வேடமெல்லாம் போட்ட இனியாதான். இதில் ஐடியில் வேலை பார்ப்பவராக வருகிறார்.

எட்டு பாத்திரங்களைச் சுற்றிச் சுழலும் படக்கதையான இது  முழுக்க முழுக்க கடற் கரையோரம் நடக்கிறது. சென்னை, மங்களூர், பெங்களூரில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்.