கடற்கரையில் குப்பை பொறுக்கும் நடிகை!

sa13.3பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், மதுபாட்டில்கள், விலங்கின கழிவுகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பல்வேறு பொருட்களால் பாழ்பட்டு கிடக்கிறது மெரீனா.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய அழகிய கடற்கரையை மேலும்  அழகுபடுத்தவேண்டியது நமது பொறுப்பல்லவா.?அதனை தூய்மையாக்கும் ஆகப்பெரிய பொறுப்பை ஏற்கும் தருணத்தை ஏற்படுத்தி தந்துள்ளது ஏஞ்செல்ஸ் ஆப் மெரீனா.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் “நான் விரும்பும் மெரீனா, மெரீனாவின் தேவதை நான்” என்ற திட்டத்தை ஏஞ்செல்ஸ் ஆப் மெரீனா என்ற அமைப்பு வெற்றிகரமாக நடத்தி வருகிறது. மெரீனாவை சுத்தமாக்கி, பசுமையின் உறைவிடமாக்கி, மெரீனாவின் பெருமையை மீட்டெடுப்பதே இந்த அமைப்பின் லட்சியமாகும். மெரீனா கடற்கரையை சுத்தமாக்குவதோடு, அதுகுறித்த விழிப்புணர்வை சென்னைவாசிகளிடம் ஏற்படுத்துவதும் ஏஞ்செல்ஸ் ஆப் மெரீனாவின் நோக்கங்களில் ஒன்றாகும்.
kuppai1ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் 100-க்கணக்கான தன்னார்வலர்கள் மெரீனா கடற்கரையில் திரள்கின்றனர். பள்ளி,கல்லூரி, பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒன்றாக சேர்ந்து கலங்கரை விளக்கத்தில் இருந்து சுத்தமாக்கும் பணியை துவக்கி காலை 9 மணியளவில் முடிக்கின்றனர். இந்த பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு ஏஞ்செல்ஸ் ஆப் மெரீனா அமைப்பின் சார்பில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. சமயத்தில் வெளிநாடுகளில் இருந்து வருகிறவர்களும் மெரீனாவை சுத்தப்படுத்தும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சான்றிதழ்களை பெறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
ஏஞ்செல்ஸ் ஆப் மெரீனா அமைப்பின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட நடிகை சாக்ஷி அகர்வாலும், மெரீனாவை சுத்தப்படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முன்வந்துள்ளார். மெரீனாவை சுத்தப்படுத்தும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் 875496682 அல்லது 9176840500 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மார்ச் 12-ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஏஞ்செல்ஸ் ஆப் மெரீனா பற்றி…
பால்ஸன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மணிகண்டன் ஒருமுறை மெரீனா கடற்கரைக்கு வந்தார். அப்போது சுண்டல் சுற்றப்பட்ட காகிதம் ஒன்றில் மகாத்மா காந்தியின் பொன்மொழியான, உலகில் நீ காண விரும்பும் மாற்றத்தை உன்னில் இருந்தே துவங்கு என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது. மெரீனா சுத்தமாக இருக்க வேண்டும் என்ற கனவை, நாமே ஏன் துவக்கக் கூடாது என்று மணிகண்டன் அன்று சிந்தித்ததன் விளைவுதான் ஏஞ்செல்ஸ் ஆப் மெரீனா பிறந்த கதை. மெரீனாவை சுத்தமாகவும், பசுமையாகவும், பாதுகாப்பாகவும் வைப்பதுதான் இந்த அமைப்பின் நோக்கமாகும்.​