‘கட்டம் சொல்லுது’ விமர்சனம்

மாப்பிள்ளையே நிச்சயம் ஆகாத நிலையில் ஒரு அசட்டு தைரியத்தில் ஜோதிடத்தின் மீதும் கும்பிடும் தெய்வங்கள் மீதும் உள்ள நம்பிக்கையில் தீபா சங்கர் தன் மகளின் திருமணத்திற்காக மண்டபம் முதல் மேளம் ,சமையல் கலைஞன் வரை அட்வான்ஸ் தொகை கொடுத்துவருகிறார். திருமணத் தேதி சொல்லும்போது, மாப்பிள்ளை எந்த இடம் என கேட்க “மாப்பிள்ளையை இனிமேதான் பார்க்கணும், நிச்சயமா கல்யாணம் கண்டிப்பா குறிப்பிட்ட தேதியில் நடக்கும்” என்கிறார் .

இந்நிலையில் தீபா சங்கர் தன் மகளின் திருமணத்திற்காகத் தன் மகளுக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைக்குமா என்று குறி சொல்பவர்களிடம் செல்கிறார். குறி சொல்லும் பெண்ணொருத்தி மாப்பிள்ளை பற்றி ஒரு குறிப்பைக் கொடுக்கிறாள்.
அதன்படி தேடுகிறார் தீபா.

அதற்காக ஒரு ஜோதிடரை தேடிப் போனபோது அங்கே ஒருவனைச் சந்திக்கிறார்.குறி சொல்லும் பெண் சொன்ன தூதுவன் இவனா இருக்குமோ என்ற சந்தேகத்தில் ஜாதகம் பார்க்க வந்த திடியனை தீபா சங்கர் விசாரிக்க,என் நண்பனுக்காக ஜாதகம் பார்க்க வந்தேன் சரித்திர பெயர் கொண்ட வந்திய தேவன் என் நண்பன் என எழிலனின் கதையோடு மற்ற நண்பர்களின் கதையையும் திடியன் சுவாரஸ்யமாக சொல்ல ,கதையைக் கேட்ட தீபா சங்கர் குறி சொல்லும் பெண்சொன்ன தூதுவன் இவன் நண்பன்தான் என்ற நம்பிக்கையுடன் இருக்கும்போது அதிர்ச்சி தரும் விதமாக கதையின் இறுதிக் கட்டத்தை தீபா சங்கரிடம் சொல்கிறார் திடியன் .

குறிப்பிட்ட தேதியில் தீபா சங்கர் சரித்திர பெயர் கொண்ட மணமகனுடன் தன் மகளைத் திருமணம் செய்து வைத்தாரா? என்பதுதான் ‘கட்டம் சொல்லுது ‘படத்தின் கதை !

கதைக்கேற்றபடி தீபா சங்கரின் நடிப்பு சிறப்பு.

படத்தில் நடித்துள்ள அனைவருமே மண்ணின் மைந்தர்களாக வருகிறார்கள்.எளிமையான எதார்த்த முகங்கள்.அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பாக உள்ளது.

தமீம் அன்சாரி இசையும்,சபரிஷின் ஒளிப்பதிவும் சிறப்பாக உள்ளது

கதை எழுதி படத்தை இயக்கியத்துடன் நண்பர்களில் ஒருவராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் எஸ்.ஜி எழிலன் . ஜாதக கட்டங்களை நம்பாமல் உன்னையும் உன் உழைப்பை மட்டும் நம்பு என்ற கருத்தின் அடிப்படையில் புதியவராக இருந்தாலும் நம்பி இயக்கியுள்ளார் நடிகர் , இயக்குநர் எஸ்.ஜி. எழிலன்.எளிமையான பட்ஜெட்டில் ஒரு கதையை ஜனதா சாப்பாடு போல கொடுத்திருக்கிறார்.