‘கதகளி’ விமர்சனம்

kathakali-visalதானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர் விஷால்.கடலூரில் இருக்கும் அவருக்கும் சென்னையிலுள்ள கேத்தரின் தொசாவுக்கு ராங்கால் மூலம் ரைட்டான காதல் வளர்கிறது.கடலூர் மாவட்டத்தில் மீனவர் சங்க தலைவராக இருக்கும் ‘ தம்பா’  மதுசூதனன் குட்டிராஜாவாக வலம் வருகிறார் அவருக்கு எதிரிகளே இல்லை. பகைத்தால் ஆள் காலி. அடிதடி, கட்டப்பஞ்சாயத்து செய்வதுடன், மீன்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழிலும் செய்கிறார். இவருக்கு உறுதுணையாக இரண்டு மைத்துனர்கள் இருந்து வருகிறார்கள். மதுசூதனனின் அடாவடி ரவுடித்தனத்தால் ஊரில் அவருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள்,எதிரிகள்.

இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும் விஷாலுக்கும் கேத்தரின் தெரசாவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன

இந்நிலையில் மதுசூதனன்  ஒருநாள்  கொலை செய்யப் படுகிறார். அவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டிக் கொல்கிறது. இதனால் கடலூரில் கலவரம் ஏற்படுகிறது. இந்த செய்தியை விஷாலின் அண்ணன் மைம் கோபி விஷாலுக்கு கூறுகிறார். இக்கொலையில் சந்தேகப்படும் பலரில் விஷாலும் அடக்கம். காரணம் விஷாலின் அண்ணன் அந்த தாதா ‘தம்பா’ மதுசூதனிடம் வேலை பார்த்து தனித் தொழில் தொடங்கவே தன்ஆட்களைவிட்டு கடையை உடைத்ததுடன் விஷாலின் அப்பாவின் காலை துண்டாக்கி விடுகிறார்கள். பழிவாங்க விஷால் துடிக்கிறார் இருப்பினும் அடக்கியே வாசிக்கிறார்.

ஆனாதும் தம்பா இறந்த பின் கொலைப்பழியுடன் போலீசிடம் சிக்கியவர் ,அவர்கள் துரத்தவே விஷால் ஓடுகிறார். தப்பித்தாரா இல்லையா என்பதே க்ளை மாக்ஸ்.

தாதா தம்பா அறிமுகம். விஷால் , கருணாஸ் கலகலப்புகள் என்று படம் தொடங்குகிறது. ஜாலியான காதல் காட்சிகள் என  இப்படியே போகும் கதை ,தம்பா கொலைக்குப்பின் விஷாலை பழியின் கயிறு இறுக்கியதும் ஓட்டம் எடுக்கிறது.மறுபாதி கதையில் கதை டாப்கியரில் ஓட்டமெடுக்கிறது.   விஷாலின் தவிப்பும் துடிப்பும் நம்மை பரபரப்பூட்டுகின்றது. கடைசியில் விஷால் ,தான்தான் தான் தம்பாவைக் கொலை செய்ததாகக் கூறுவது  அபத்தம். ட்விஸ்ட் என்கிற நினைப்பில் காதுலபூ சுற்றியுள்ளார் பாண்டிராஜ்.

தன்னால் ‘பசங்க’ கதைதான் செய்ய முடியுமா ஆக்ஷன் திரைக்கதையிலும் கலக்க முடியும் என்று நிருபித்துள்ளார் பாண்டிராஜ்.

விஷால் அளவான நடிப்பு ஆக்ஷனில் துடிப்பு என கவர்கிறார். கேத்தரின் தெரசா இதில் அழகாகத் தெரிகிறார். விஷால் ,கருணாஸ் கூட்டணி கலகலப்பூட்டுகிறது.  சில உறுத்தல்களை விட்டால் கதகளி நல்ல ஆக்ஷன் விருந்துதான்.