’கனா’ விமர்சனம் 

 
 
 
அறிமுக இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கனா’.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்., 

கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று  கனாக்காணும்  விவசாயியின் மகளின்  
கனவை ப் புரிந்துக்கொண்ட அவளது அப்பா, மகளின் ஆசையை எப்படி நிறைவேற்றுகிறாரா,?இல்லையா? இதுதான் வினா.இதற்கான விடையே  ‘கனா’ படத்தின் கதை.
 
 
சத்யராஜ் ஒரு  விவசாயி . தீவிர கிரிக்கெட் ரசிகர். அவரது அப்பா இறப்பின் போதும் டிவி-யில் திருட்டுத்தனமாக கிரிக்கெட் பார்க்கும் அளவுக்குத் தீவிர ரசிகர். இந்தியா ஒரு போட்டியில் தோல்வி அடைய, அதை தாங்கிக்கொள்ள முடியாமல் சத்யராஜ் கண் கலங்குகிறார். அதைப் பார்க்கும் அவரது மகள், தான் கிரிக்கெட் விளையாடி இந்தியாவை ஜெயிக்க வைத்து தனது அப்பாவை சிரிக்க வைக்க வேண்டும், என்று எண்ணுகிறாள். 
 
சிறுமியின் ஆசை வளர்ந்து  ஒரு  கட்டத்தில் ஊரில் உள்ள ஆண்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட தொடங்குகிறாள்,அவளனது அப்பாவோ  ஆதரிக்கிறார். இருந்தாலும், ஊர் மக்கள், அம்மாவின் எதிர்ப்புகளுக்கு ஆளாகிறாள். இருப்பினும், தனது  திறமையாலும் உறுதியாலும் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி, இந்திய அணியில் இடம்பிடிக்கிறாள்.அங்கிருக்கும் அரசியலால் துவண்டு போக, பிறகு அவர் எண்ணியது நடந்ததா இல்லையா என்பதே ‘கனா’ வின் கதை.,
 
 
 
விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படங்கள் என்றாலே அதன் திரைக்கதை  ஒரு கட்டகத்தில்தான் நிற்கும்..  இந்த கதையும் அப்படித் தான்என்றாலும், பெண்களை மையப்படுத்திய படம் என்பதில் இப்படம் வேறுபடுகிறது. அத்துடன் விளையாட்டு மோகம் பற்றி மட்டுமே பேசாமல், விவசாயம் பற்றியும் பேசியிருப்பது இப்படத்தின் மிகப்பெரிய பலம்.
 
 

தமிழ் சினிமாவின் நடிக்கத் தெரிந்த நடிகைகளில் முக்கியமானவராக ஐஸ்வர்யா ராஜேஷ்  உள்ளார். 

 ‘குளித்தலை’ என்ற ஒரு கிராமத்தில் பிறந்து, கிரிக்கெட் விளையாட துடிக்கும் ‘கௌசியாக’ நடித்துள்ளார் .. கிரிக்கெட் என்ற ஒரே குறிக்கோளுடன் மற்ற அனைத்தையும் மறந்து; தடைகளை தாண்டி இந்திய அணிக்காக விளையாடி உலக கோப்பை வென்று சாதித்து காட்டும் கதாபாத்திரமாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு அத்தனை எதார்த்தமாக அமைத்துள்ளது. 
 
 
ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பாவாக நடித்திருக்கும் சத்யராஜ்,  கௌரவமாக வாழ எண்ணும் விவசாயிகளின் துயரங்களை உணர்த்துகிறார். மனதில் பதியும்  விதத்திலும் நடித்திருக்கிறார்.
 
 ரமா, தர்ஷன், இளவரசு என்று படத்தில் நடித்த மற்ற நடிகர்களின் கதாபாத்திரமும், அவர்களது நடிப்பும் இயல்பாக இருக்க, கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் வேடத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயனின் பாத்திரமும் அவரது நடிப்பு  ஈடுபாடும் படத்திற்கு பலம் .“ஜெயிச்சிடுவேன் என்று சொன்னா இந்த உலகம் கேட்காது, ஜெயிச்சவன் சொன்னா தான் கேட்கும்” அவர் ஐஸ்வர்யா ராஜேஷிடம் பேசும் வசனத்திற்கு  கைதட்டல் கிட்டும்.
 
கிரிக்கெட் போட்டி காட்சிகளை படமாக்கிய விதமும்கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்த அனுபவம் கொடுக்கிறது.
 
 
விளையாட்டை மையமாக வைத்த படங்களுக்கு விறுவிறுப்பு வேகம் என்பது ரொம்பவே முக்கியம் என்பதைப் புரிந்து இப்படத்தின் காட்சிகளை அமைத்திருக்கும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்,  கிரிக்கெட்டை கதைக்களத்தை எடுத்துக்கொண்டாலும், அழிந்து வரும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
 
 
தான் சொல்ல வந்ததை இயக்குநர் சொன்னாலும், ஐஸ்வர்யா ராஜேஷ் இந்திய அணியில் இடம்பிடிப்பது, அவர்  பயிற்சி மேற்கொள்வது போன்றவை பழைய நெடி. , இந்திய அணியில் நடக்கும் அரசியலை அழுத்தமாக சொல்லாமல், சினிமாத்தனமாக சொல்லி படத்தை முடித்திருக்கிறார். அதேபோல், படத்தில் வரும் சச்சின் மற்றும் டெண்டுல்கர் என்ற கதாபாத்திரங்கள் ரசிகர்களை சிரிக்க வைக்க, பல வகையில் முயற்சித்தாலும்,  முடியவில்லை.“ஆச பட்டா மட்டும் போதாது; அடம் பிடிக்க தெரியணும்,  “சமச்சவங்கள கூட டக்குனு பாராட்டிடறோம், ஆனா அத வெதச்சவங்களுக்கு ஒன்னு நா ஏன் கவனிக்க மாட்டேங்கிறோம்,” போன்ற வசனங்கள் கை தட்டல்களை அள்ளும்.. சத்யராஜ், ஐஸ்வர்யாவை தவிர்த்து; அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரமா;  கடைக்காரராக நடித்திருக்கும் இளவரசு போன்றோரும் அருமையாக நடித்து இருக்கின்றனர்.
 
நல்ல வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை, விவசாயம் பற்றிய நல்ல கருத்து என்று அனைத்து தரப்பினரும் பார்க்கும் அளவுக்கு படத்தில் பல நல்ல விஷயங்களை வைத்திருக்கிறார்.. இருப்பினும்,  திரைப்படமாக ‘கனா’  மாசில்லா நம்பிக்கை படமாகவே உள்ளது.
Pin It

Comments are closed.