கமல் சுறு சுறு !ஒரே ஆண்டில் 4 படங்களில் நடித்து சாதனை !

kamalதிரை உலகின் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான கமல் இனி தனது படங்கள் விரைவாக வெளியாகும் என்று கூறி இருந்தார். அதற்கு ஏற்ப இந்த வருடம் மட்டும் கமலின் 4 படங்கள் திரைக்கு வந்து இருக்கின்றன.

இதில் முதலில் வந்த கமலின் திரைப்படம் ‘உத்தமவில்லன்’. இதில் அவர் முழுக்க முழுக்க நடிகராகவே நடித்த இருந்தார். விதம் விதமான தோற்றங்களில் வந்து தனது தனித்தன்மையைக் காட்டியிருந்தார்.

அடுத்து வெளியான படம் ‘பாபநாசம்’. இது குடும்ப படமாக அமைந்தது. பொறுப்பு மிகுந்த அப்பாவாக நடித்தார். இது மலையாளப் படத்தின் மறு உருவாக்கம் என்றாலும், அந்த அடையாளமே தெரியாத விதத்தில் இந்த படத்தில் நடித்தார். இது அமோக வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது.

அடுத்து திரைக்கு வந்த கமல் படம் ‘தூங்காவனம்’. திரிஷா, பிரகாஷ்ராஜ் இணைந்து நடித்த இது அதிரடி ஆக்ஷன் படமாக அமைந்தது. இதே படம் தெலுங்கில் ‘சீகட்டி ராஜ்யம்’ என்ற பெயரில் நேரடியாக தயாரிக்கப்பட்டது. இந்த படம் ‘தூங்காவனம்’ திரைக்கு வந்த சில தினங்களில் ஆந்திரா, தெலுங்கானா வில் ரிலீஸ் ஆனது.

இதையும் சேர்த்து இந்த ஆண்டு மட்டும் கமல் நடித்த 4 படங்கள் திரைக்கு வந்து இருக்கின்றன. இது மட்டுமல்ல, அடுத்த படத்தையும் கமல் அறிவித்து விட்டார். கமலுடன் அமலா மீண்டும் நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது.

இதை பிரபல மலையாள இயக்குனரும் தேசிய விருது பெற்றவருமான டி.கே. ராஜீவ்குமார் இயக்குகிறார். 1989–ல் கமல் நடித்து வெற்றி பெற்ற ‘சாணக்யன்’ படத்தை இயக்கிய இவர் 26 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கமலுடன் இணைகிறார்.

கமல் நடிக்கும் இந்த புதிய படத்துக்கு தெலுங்கில்‘அம்மா நானா ஆட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.தமிழில் ‘அம்மா அப்பா விளையாட்டு, என்று பெயர் வைக்கப்படுகிறது. குடும்பப்படமாக உருவாகும் ‘அம்மா, அப்பா விளையாட்டு’ நகைச்சுவை கலந்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்துக்காக கமல் 50 நாட்கள் ‘கால்ஷீட்’ கொடுத்து இருக்கிறார். இதன் முக்கிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.