கலக்கும் ‘கபாலி’ பாடல் டீஸர் 2 கோடி 20 லட்சம் பேர் பார்த்து சாதனை!

Rajini-Kabali-Teaser இன்னும் சில வாரங்களில் கபாலி திரைப்படம் வெளியாகவுள்ளது. அதற்குள் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக கபாலி திரைப்படத்தின் இன்னொரு பாடல் டீசர் வரும் வாரத்தில் வெளியாகவுள்ளது.

22 மில்லியன் பேர் அதாவது 2 கோடியே 20 லட்சம் பேர் கண்டு ரசித்து சாதனை படைத்த கபாலி டீசருக்கு பின் ‘கபாலி’ திரைப்படத்தின் இசைக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இசை இங்கு நல்ல இசை , மிகச்சிறந்த இசை மற்றும் சூப்பர் ஸ்டாரின் இசை என்று மூன்று வகைப்படும்.

ஜூன் 11 ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கிடேயே வெளிவந்த ‘கபாலி’  பாடல் டீஸர்  , இதுவரை இல்லாத மாபெரும் சாதனையை படைத்தது என்று தான் கூற வேண்டும். கபாலியின் பாடல்களை இந்த உலகமே கொண்டாடியது நாம் அறிந்த உண்மை. கபாலி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை சூப்பர் ஸ்டார் அவர்களின் ரசிகர்களால் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது.

கபாலி எனும் ப்ளாக்பஸ்டர் ஆல்பத்தின் மூலம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களை ஆட்கொண்டுள்ளார் என்றே கூறவேண்டும். அந்த அளவுக்கு கபாலி திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் அனைத்து தரப்பினரும் மீண்டும் மீண்டும் விரும்பி கேட்க்கும் பாடல்களாக அமைந்துள்ளது.

kabali1வெளியாகிய ஒரு வாரத்திலேயே கபாலி திரைப்படத்தின் பாடல்கள் சமூக வலைதளத்தில் இது வரை நிகழ்த்தப்பட்ட அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. இது வரை யூ டியூபில் நிகழ்த்தப்படாத சாதனை கபாலி ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள “ நெருப்பு டா “ பாடலை நான்கு மில்லியன் பேர் பார்த்தது தான். இது மட்டுமல்லாமல் பாடல்கள் கானா , விங்க் ,ஹங்காமா என அனைத்திலும் ஹிட் அடித்துள்ளது. ஐ ட்யூனஸ் இந்தியா , சிங்கபூர் ,அர்மேனியா , மலேசியா ,ஸ்ரீ லங்காவில் அதிகம் விற்பனையாகும் பாடல்களில் நம்பர் ஒன் இடத்தை “ கபாலி “ பிடித்துள்ளது.

இது மட்டுமல்லாது பாடல்கள் ட்விட்டர் , பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டுக்கு பின்னர் திங் மியூசிக் நிறுவனத்துக்கு மிகப்பெரிய ஆல்பம் என்றால் அது கபாலி தான்.

கபாலி ஆல்பம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் திங் மியூசிக்கிற்கு 10ஆவது ஆல்பம். இயக்குநர் பா. ரஞ்சித்துடன் 3ஆவது ஆல்பமாகும். கபாலி வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு அவர்களுடன் திங் மியூசிக் பெருமையுடன் இணையும் 3ஆவது ஆல்பம். மிகப்பெரிய திறமைசாலிகளான சந்தோஷ் நாராயணன் , பா.ரஞ்சித் , பாடகர்கள் , பாடலாசிரியர்கள் இந்த ப்ளாக் பஸ்டர் ஆல்பத்தில் இணைந்துள்ளது இதன் தனி சிறப்பு. சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் நடித்துள்ள திரைப்படம் வெளியாகிறது என்றாலே அது திருவிழா தான். அதற்க்கு நிகராக வேறு எதுவுமே இருக்க முடியாது. நாங்கள் இப்படைப்போடு இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்றார் திங் மியூசிக் ஸ்வரூப் ரெட்டி.

நீங்களும் காண  இதோ இணைப்பு :