கலையரசன் – கருணாகரன் நடித்திருக்கும் “களவு” படத்தின் முதல் போஸ்டரை வெங்கட் பிரபு வெளியிட்டார் !

kalaiyarasan4கலையரசன் – கருணாகரன் நடித்திருக்கும் “களவு” படத்தின் முதல் போஸ்டரை வெங்கட் பிரபு வெளியிட்டார்

கலையரசன் – கருணாகரன் நடித்திருக்கும் “களவு” படத்தின் முதல் போஸ்டரை வெங்கட் பிரபு வெளியிட்டார்

கலையரசன் – கருணாகரன் நடித்திருக்கும் “களவு” படத்தின் முதல் போஸ்டரை வெங்கட் பிரபு வெளியிட்டார்

கிரைம் – திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் “களவு” படத்தில் கலையரசன், கருணாகரன், பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், மைம் கோபி மற்றும் அபிராமி ஐயர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எதிர்பாராத சம்பவங்களால் மூன்று இளைஞர்கள் மற்றும் ஒரு தம்பதிகளின் வாழ்க்கை மாறுகின்றது. இது தான் “களவு” படத்தின் ஒரு வரிக் கதை. நம் சமுதாயத்தில் நடைபெறும் உண்மைச் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் “களவு”  படம், சென்னையில் படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய நண்பர்களோடு இருக்கும் போது குதூகலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் ஐ டி ஊழியர் கலையரசன், தன்னுடைய வீட்டிற்கு சென்றவுடன் முழுவதுமாக மாறி விடுகிறார். இவரது வாழ்க்கையை மையமாக கொண்டு தான் “களவு” படத்தின் கதை நகர்கின்றது. இரவு பணிகளில் வேலை பார்க்கும் ஒரு  BPO நிறுவன ஊழியராக கருணாகரன் இந்த படத்தில் நடித்துள்ளார்.  அவருடைய நடவடிக்கைகள் வித்தியாசமாக காணப்பட்டாலும், அதற்கு ஆழமான அர்த்தங்கள் இருக்கும்.
இந்த திரில்லர் படத்தை அறிமுக இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கி இருக்கிறார். இவர் பல குறும்படங்களை இயக்கி இருப்பது மட்டுமின்றி, விரைவில் வெளியாகும் பல படங்களுக்கு திரைக்கதையும் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. வான்கூவர் பிலிம் பள்ளியில் பயின்று பட்டம் பெற்று, பல கனடா நாட்டு படங்களில் மேற்பார்வையாளராக பணியாற்றிய விக்னேஷ் ராஜகோபாலன் இந்த களவு பாடத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.  இசையமைப்பாளராக சுந்தரமூர்த்தி, படத்தொகுப்பாளராக கிருபாகரன் புருஷோத்தமன் மற்றும் கலை இயக்குநராக வாகை சூடவா புகழ் சீனு பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.
kalavuபிக் பிரிண்ட் பிச்சர்ஸ் சார்பில் ஐ பி கார்த்திகேயன் மற்றும் ஸ்பைசி கூல் இம்ப்ரெஷன்ஸ் சார்பில் திலீபன் எம் செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து இந்த களவு படத்தை தயாரித்து இருக்கின்றனர். LINE Producer ஆக குய்ன்ஸ் ஸ்டுடியோ கிருஷ்ண சந்தர் பணியாற்றி இருக்கிறார். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் இவர்கள் ஆரம்ப நாட்களில் இருந்து பக்கபலமாய் செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. களவு படத்தின் முதல் போஸ்டரை நேற்று  இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார்.