‘காடு’ திரைப்படம் எதைப்பற்றிப் பேசுகிறது? ஒரு விளக்கம்

Vidharth in Kaadu Movie Postersபார்த்தவர் சொல்கிறார் படியுங்கள்.

இந்தப் படம் பற்றி எழுதவேண்டும் என்று முதன் முதலில் பார்த்த பொழுதே தோன்றிவிட்டது. பொதுவாகவே திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அதைப் பாராட்டுவது, தூற்றுவது, வெளியாகி முதல்வாரத்தில் அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் பொழுதும் அதைப்பற்றிய கருத்துதெரிவிப்பதைத் தவிர்த்துவிடுவேன். சமூகவலைதளங்களால் ஒருதிரைப்படத்தின் வெற்றி/தோல்விநிர்ணயிக்கப்படுவதில்லை என்று நம்பினாலும், அடிப்படை அறம் சார்ந்த விஷயமாகக்கருதி உறுதியுடன் இதைப் பின்பற்றிவருகிறேன்.
இத்திரைப்படம் பற்றி ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் பகிர ஆசைப்படுகிறேன்.
“இதுவரைபார்க்காத” லொக்கேஷன்களில் டூயட் பாடல்கள் பார்த்திருப்போம். ஆனால் இத்திரைப்படம் “காடு” முழுக்க முழுக்கவே திரையில் இதுவரை நாம் பார்க்காதஇடங்கள் (இதேதமிழ்நாட்டுக்குள்ளேயே), மனிதர்கள் என்று முற்றிலும் மாறுபட்டமுயற்சி. தன் முதல் படத்திலேயே இதுவரை யாரும்பேசாத, ஆனால் அனைவரும் அறிந்த அரசியலைப் பற்றி தைரியமாக, ஆவேசமாகக் காட்சிவழி முன்வைத்திருக்கிறார் இயக்குநர்.
முதல் பாதியிலேயே அந்த வித்தியாசத்தை உணரமுடிகிறது. சின்னச்சின்னக் கதாபாத்திரங்கள் மூலம்அத்தனைஅழகாக நாம் அறிந்திராத மனிதர்கள் இயல்பாகத் தோன்றுகின்றனர். இயக்குநரின் முதல்திரைப்படம் என்று நம்பமுடியாத அளவிற்கு பாத்திரங்களின் கையாளளில் முதிர்ச்சிதெரிகிறது. ஹீரோ விதார்த் முதல், மற்றநடிகர்கள் வரைஅனைவரும் தங்கள் நடிப்புக்குப் பெயர் வாங்கியவர்கள். விதார்த் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் “மைனா”விற்குப்பிறகு அவருக்கான திரைப்படம் இன்னும் வரவில்லையோ என்றுதோன்றும். “காடு” நிச்சயம் அவருக்கான  .
இரண்டாவது பாதியில் நடக்கும்கதையும், கதைக்களனும், கதாபாத்திரங்களும் புத்தம்புது அனுபவம். இரண்டாம்பாதி இன்னமும் காத்திரமானது. அதில் நடித்திருப்பவர்கள் திரைப்படத்திற்கும் பெருமை சேர்த்திருக்கின்றனர், அவர்கள் நடிப்பும் நிச்சயம்பேசப்படும்.
கதை ஒருவரை மையப்படுத்தி நிகழாமல், சம்பவங்கள், அதனால் பாதிப்படைபவர்கள், பாதகத்தை ஏற்படுத்துபவர்கள், அதற்குத் தூண்டுகோலாக இருப்பவர்கள் என்று விரிந்து நகர்ந்தாலும், திரையில் தோன்றும் ஒரு சிறு கதாபாத்திரமும் கதையின் இந்தமையத்திற்கு வலுசேர்ப்பதாகவே இருக்கிறது. திரைப்படத்தில் ஒருநேர்த்தியான கோர்வையை உணரமுடிகிறது.
வெகுஜனத் திரைப்படம், கமெர்ஷியல் திரைப்படம் என்றபெயரில் எதையெதையோ நாம்பார்ப்பதற்கு நிர்பந்திக்கப்படுகிறோம். இதைப் போன்றபடங்கள் வெற்றியடைய நாமேநம்மை நிர்பந்தித்துக் கொள்ளவேண்டும். இது ஒருமாற்றுத் திரைப்படமாகவோ, கலைத்திரைப்படமாகவோ, சமுதாயத்திற்கு செய்திவழங்கும் திரைப்படமாகவோ இல்லாதிருக்கலாம். ஆனால், தனக்கானவெளிகளிலேயே, தான் சொல்ல நினைத்ததைத் தைரியமாகச்சொல்லி, அழகாகக் காட்சியும் படுத்தியிருப்பதிலேயே இத்திரைப்படம் அதன் முக்கியத்துவத்தைப்பெறுகிறது.
படம் முழுக்க முழுக்கவே வீரியத்துடன் இருக்கும் வசனங்களே இதற்குச் சாட்சி. வசனங்களும் இயக்குநரால் எழுதப்பட்டவைதான். படத்திற்கான மிகப் பெரும் பலமாக வசனங்கள் பேசப்படும் என்றுநம்புகிறேன்.
இயக்குநர் ஸ்டாலின் ராமலிங்கம், எடிடர் காசிவிஸ்வநாதன்,முத்துராமன் மற்றும் திரைப்படக்குழுவினருக்கு படம் வெற்றியடைய என்வாழ்த்துகளை மனதார தெரிவித்துக்கொள்கிறேன்.

‘காடு’திரைப்படம்பற்றி ,படத்துக்கு  சப்-டைடில் செய்த தமிழ்ப் பெண்ணான விலாசினியின் விமர்சனம் இது