காதலுடன் நகைச்சுவை கலந்த சித்திரம்: இஞ்சி இடுப்பழகி

anuska4சமூகத்தில் நிலவும் அன்றாட பிரச்சினைகளை பற்றிய கருத்துக்களை சமூக வலை தளங்களில்  ‘இஞ்சி இடுப்பழகி’ பட குழுவினர்  விவாதிக்க உள்ளனர்.

பிரம்மாண்டமான  படங்களுக்கு பிரசித்திப் பெற்ற பி வி பி சினிமா தயாரிக்க , இயக்குநர் பிரகாஷ் கொவேலமுடி  இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா, சோனல்  சௌஹன்,பிரகாஷ் ராஜ், ஊர்வசி மற்றும் பலர் நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ காதலுடன்  நகை சுவை  கலந்த சித்திரமாகும். இந்தப்படத்தை பற்றி இதுவரை வெளி வந்த செய்திகள் அனுஷ்காவின் பிரம்மாண்டமான உருவத்தைப் பற்றியும், ஒருவருடை உடல் வாகு சமுதாயத்தில் அவர்களுக்கு எத்தகைய அடையாளத்தை பெற்று தருகிறது என்பதையும்  சித்தரிப்பதாக உள்ளது.இந்த சிந்தனையை ஒட்டியே படக் குழுவினர் சமூக வலை தளங்களில் விவாதிக்க உள்ளனர்.
அனுஷ்காவுடைய உருவ அமைப்பு பற்றிய கருத்துக்களுக்கு அவரது பதில் ‘அழகு என்பது உருவத்தில் உருவானது அல்ல. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மை ஏற்றுக் கொள்வதுதான்  சரி என்ற கோணத்தில் விவாதிக்க உள்ளார்..சதா சர்வமும் உடல் பயிற்சியை பற்றியே பேசும் ஆர்யாவோ ‘ உடல் பயிற்சியின் அத்தியாவசியத்தையும், ஊட்டச் சத்து உள்ள உணவின் அவசியத்தையும் பேச இருக்கிறார்.
இதன் மூலம் ரசிகர்கள் இடையே படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாக்க முடியும் என நம்புகிறார்கள் படக்குழுவினர்.

இதை ஒட்டி ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு போட்டியும் நடக்க இருக்கிறதாம்.செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் இசை வெளி வர உள்ளதாகவும் , அக்டோபர் மாதம் படத்தை வெளியிட  தீவிர முயற்சியில் இருப்பதாகவும் செய்திகள் கசிகின்றன..

Pin It

Comments are closed.