காதல் கொலை செய்யும் ,தற்கொலையைத் தூண்டும் : புதுக்கருத்தைச் சொல்லும் படம்!

mom1இதுவரையிலும் காதல் ஒரு அமிர்தமாகவும் அருமருந்தாகவும்தான், புத்தகங்களிலும், திரைக்கதையிலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த காதல் என்ற அமிர்தத்தால், அருமருந்தால் ஏற்படுகிற பக்க விளைவை இந்த ‘‘மனதில் ஒரு மாற்றம்” திரைப்படத்தின் மூலம் பட்டவர்த்தனமாக பதிவு செய்திருக்கிறோம்.

இந்த ‘‘மனதில் ஒரு மாற்றம்” திரைப்படத்தை பார்க்க ஒரு காதல் ஜோடி வந்தார்கள் என்றால் படம் முடிந்து வெளியே போகும் போது அவர்கள் மனதிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டு தெளிவான மன நிலையோடு அவரவர் வீட்டிற்கே செல்வார்கள் என்று நம்புகிறோம்.

புகையிலை புற்று நோயை உண்டாக்கும், குடி குடியைக் கெடுக்கும், உடல் நலத்திற்கு தீங்கானது என்ற இந்த எச்சரிக்கைகள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது போல் காதலில் ஏற்படுகிற கொலைகள், தற்கொலைகள் போன்ற பல தீய செயல்களை தடுக்க இந்த ‘‘மனதில் ஒரு மாற்றம்’’ திரைப்படம் இன்றைய இளைய சமுதாயத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.mom

இந்த மனதில் ஒரு மாற்றம் திரைப்படம் இளைஞர்களால் மட்டும் இன்றி பெற்றோர்களாலும் கொண்டாடப்படும் ஒரு சிறந்த திருவிழாவாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.’’ என்கிறார் டைரக்டர் ஜனா வெங்கட்.

இவர் இயக்குநர் சு.பார்த்திபன் அவர்களின் குருகுலத்தில் சினிமா கற்றவர் மற்றும் சாமி அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.  இவர் இயக்கிய குறும்படம் “வின்னிங் ஸ்டார்” 2004-ம் ஆண்டு கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் நடந்த குறும்பட  விழாவில் திரையிடப்பட்டது.  அடுத்ததாக 2007-ல் இவர் இயக்கிய “அப்பா என் செல்லம்” குறும்படமும் பாராட்டு பெற்றது.  அதேபோல் இப்போது இயக்கி இருக்கும் “மனதில் ஒரு மாற்றம்” படமும் எல்லோராலும் பாராட்டப்படும் என நம்புகிறார்.

இப்படத்தில் மதன் கதாநாயகனாகவும் ஸ்பூர்த்தி கதாநாயகியாகவும் அறிமுகம் ஆகின்றனர்.  இவர்களுடன் ஆதவன், டான்ஸ் மாஸ்டர் ஜானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

வல்லினம் படத்திற்காக சென்ற ஆண்டின் சிறந்த படத் தொகுப்பாளராக தேசிய விருது பெற்ற V.J..சாபு ஜோசப் இப்படத்தில் படத் தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஒளிப்பதிவாளர் சாய் நந்தா.  மேலும் இவர் மறைந்த ஒளிப்பதிவு மேதை அசோக்குமார் மற்றும் ஹாஜீஅனுமோல் ஆகியோர்களிடம் பணியாற்றியவர்.

இசையமைப்பாளராக ஸ்ரீசாஸ்தா.  இவருடைய அப்பா பூபதி அவர்கள் மலையாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

கலை இயக்குநர் மயில்கிருஷ்ணன், இயக்குநர் பாலாஜி சக்திவேல் படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியவர்.    பாடல் ஆசிரியர்கள் – அண்ணாமலை, உவரி சுகுமார், தென்றல் ராம்குமார் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள்.

இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.