‘காளி’ விமர்சனம்

‘பிச்சைக்காரன்’ படத்திற்குப் பிறகு தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து வரும் விஜய் ஆண்டனி, மீண்டும் அம்மா செண்டிமெண்டோடு களம் இறங்கியிருக்கும் இந்த ‘காளி’ அவரை காப்பாற்றுமா? என்பதை பார்ப்போம்.

அமெரிக்காவில் தனது தத்து பெற்றோருடன் வாழும் மருத்துவரான விஜய் ஆண்டனி, தனது உண்மையான அம்மாவை தேடி தமிழகத்திற்கு வருகிறார். அவரது அம்மா இறந்துவிட்டதை தெரிந்துக் கொள்ளும் விஜய் ஆண்டனியிடம், அவரது அம்மா நிறைமாத கர்ப்பிணியாக வந்ததாகவும், அவருக்கு தான் தான் அடைக்களம் கொடுத்ததாகவும் கூறும் பெரியவர், அவரது அப்பா குறித்து எந்த தகவலும் தெரியாது, என்று கூறுவதோடு, அவரது அம்மா எங்கிருந்து வந்தாரோ அந்த ஊரை மட்டும் சொல்கிறார். அந்த ஊருக்கு சென்றால் தனது அப்பா யார்? என்று கண்டுபிடித்துவிடலாம், என்று அந்த ஊருக்கு செல்லும் விஜய் ஆண்டனி, அங்கு நேரடியாக தனது அப்பாவை தேடாமல், அங்கு க்ளினிக் ஒன்றை தொடங்கி அந்த ஊர் மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்துக்கொண்டே, தனது அப்பா குறித்து விசாரிக்க, இறுதியில் அவரது அப்பாவை கண்டுபிடித்தாரா இல்லையா, அவரது அப்பா அவரது அம்மாவை ஏமாற்றக் காரணம் என்ன, என்பது தான் ‘காளி’ யின் மீதிக்கதை.

 ஜோடியாக வரும் மூன்று ஹீரோயின்களின் வேடமும் ரொம்ப டம்மியாக இருப்பதால், எந்த போஷனும் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

தனது எண்ட்ரியிலேயே ரசிகர்களை சிரிக்க வைத்துவிடும் யோகி பாபு, இதில் ரசிகர்களை சிரிக்க வைக்க படாதபாடு படுவதை விட, , டைமிங் காமெடி செய்வதற்கும் ரொம்பவே கஷ்ட்டப்பட்டிருப்பது தெரிகிறது.

 படத்தில் வரும் எந்த பாடல்களும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் எந்த இடத்திலும் நம்மை கவனிக்க வைக்கவில்லை. ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் அட்டகாசமாக வந்திருக்கிறது.

அம்மாவை தேடிச் செல்லும் விஜய் ஆண்டனி, அம்மா இல்லை என்றதும் அப்பாவை தேட தொடங்கியதுமே, அவரது அப்பா இவராகத்தான் இருக்கும், என்று ரசிகர்கள் யூகித்துவிட, க்ளைமாக்ஸும் ரசிகர்களின் யூகத்தைப் போலவே முடிவது இப்படத்தின் மிகப்பெரிய மைனசாக அமைந்துவிடுகிறது. அதற்கு மேல், விஜய் ஆண்டனியின் அப்பாவை நெகட்டிவாக காட்டாமல் பாசிட்டிவாக காட்டுவதற்காக இயக்குநர் கிருத்திகா உதயநிதி, திரைக்கதையில் சேர்த்துள்ள ஜாதி பிரச்சினை சினிமாத்தனமாக இருப்பதோடு, ரொம்ப பழசாகவும் இருக்கிறது.

கதை தொடங்கும் இடத்திலேயே முடிவையும் சொல்லும் விதமாக திரைக்கதை அமைந்திருப்பதால், எந்தவித எதிர்ப்பார்ப்பும் சுவாரஸ்யமும் இல்லாமல் படம் நகர்கிறது. அப்பாவை தேடும் போது வரும் சிலரது பிளாஷ்பேக்கில் விஜய் ஆண்டனியை பொருத்தி காட்சிகளை ஓட்டும் ஐடியா ரசிக்க வைத்தாலும், அந்த இரண்டு எப்பிசோட்களில் வரும் காதல் காட்சிகள் உப்புச்சப்பு இல்லாமல் இருக்கிறது.

மொத்தத்தில், விஜய் ஆண்டனியின் தோல்விப் பயணத்தை தொடரும் விதமாக அமைந்திருக்கும் இந்த ‘காளி’ அவரை காலாவதியாக்கிவிட்டது.

Pin It

Comments are closed.