‘காஸி’ படக்குழுவின் மகிழ்ச்சியும் நன்றியும் !

ghazi-teamபி.வி.பி சினிமாஸ் மற்றும் மேட்னி மூவி எண்டர்டைன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த படம் காஸி. அறிமுக இயக்குநர் சங்கல்ப் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்ட படத்தில், ராணா டகுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் டாப்ஸி, கே.கே.மேனன், அதுல் குல்கரனி, நாசர் மற்றும் மறைந்த  நடிகர் ஓம் பூரி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மிகவும் புதிய களத்தைக் கொண்ட இப்படத்தில் இசை, ஒளிப்பதிவு, கலை மற்றும் படத்தொகுப்பு போன்ற அணைத்து தொழில்நுட்ப அம்சங்களும் மிக அருமையாக அமைந்திருந்தது.

தேசப்பற்று படமானதாலும், இந்திய சினிமா வரலாற்றில் கடல் மற்றும் கடலடியில் படமாக்கப்பட்ட முதல் படம் என்பதாலும், இந்தியா பாகிஸ்தான் போரின் மறைக்கப்பட்ட பகுதியை சொல்லும் படம் என்பதாலும், இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் பிப்ரவரி 17 ஆம் தேதியான நேற்று தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து படப்பிடிபிற்கு உதவிய இந்திய கப்பற்படை மற்றும் கப்பற்படை  அதிகாரிகளுக்கும், படத்தின் வெற்றிக்கு பங்களித்த  அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும்,தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களுக்கும், அனைத்து ரசிகர்களுக்கும் படத்தின் ஒட்டு மொத்தக் குழு சார்பாக தங்கள்  நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.