குறும்படம் இயக்குகிறார் “தொட்டால் தொடரும்” இயக்குநர் கேபிள்சங்கர்..!

எப்சிஎஸ்  கிரியேசன்ஸ் துவார் சந்திரசேகர் தயாரிக்க, தமன்  குமார்- அருந்ததி, வின்சென்ட்  அசோகன், பாலாஜி வேணுகோபால், “சூதுகவ்வும் ” சிவகுமார் நடிப்பில்உருவாகியுள்ளது   ”தொட்டால்தொடரும்.” பி.சி .சிவன் இசையமைத்துள்ளார்    .ஒளிப்பதிவு   விஜய்  ஆம்ஸ்ட்ராங்.எடிட்டிங் சாய்அருண் செய்துள்ளார்.படம்முடிவடைந்து விரைவில் வெளியாக தயாராக உள்ளது.

cable1இந்நிலையில் அப்படத்தின்இயக்குநர்  கேபிள்சங்கர் ”தொட்டால்தொடரும்” என்கிற தன் படப் பெயருக்கு ஏற்றவகையில் சிறுசிறு குறும்படங்களை இயக்கவுள்ளார். அதில் முதல் குறும்படத்தை  விரைவில் வெளியிடஉள்ளார்.

இவர் இதற்கு முன் மூன்று குறும்படங்களை இயக்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் யூட்யூப் பெரும் அறிமுகமில்லா காலத்திலேயே குறும்படம் மற்றும் ஆவணப்படத்திற்காக ஒர் இணையதளத்தை   நடத்தியவர் கேபிள்  சங்கர் . இவரது பல சிறுகதைகள் குறும் படங்களாய் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் உருமாறி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்,இதேபோன்ற சமூகவிழிப்புணர்வு குறும்படங்கள் யார்எடுத்துக் கொடுத்தாலும் அதைதொட்டால் தொடரும் ப்ரோமோவோடு இணைத்து வெளியிட உள்ளனர்  ஒரு நிமிடத்துக்குள்ளான  குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழ்கண்டமெயிலில் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்தார் இயக்குநர் கேபிள்சங்கர்.

Mail : sankara4@gmail.com
           thottalthodarum@gmail.com

கண்டிப்பாக சமூக விழிப்புணர்வு படங்கள்தான் வரவேற்கப்படுகிறது. அப்படியான விழிப்புணர்வை தொட்டால் தொடரும் என்கிற கருத்தோடு இருக்கவேண்டும். வரும் படங்களில் சிறந்த ஒன்றைத் தெரிந்தெடுத்து அக்குழுவினருக்கு எப்.சி.எஸ்கிரியேசன்ஸ் பரிசளிக்கவிருக்கிறார்கள்.