குறும்பட தயாரிப்பில் ஈடுபடும் நடிகர் ஆரி !

 
aari44WOW CELEBRATION CEO முகமது இப்ராஹிம் நடத்திய  IT STARS நிகழ்ச்சியில் பல்வேறு சாஃப்டுவேர்  நிறுவனத்தில் பணிபுரியும்  ஊழியர்களை உற்சாகப்படுத்தவும் ,அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும் அந்த ஊழியர்களின் தனிதிறனை கண்டறிந்து அவர்களுக்கிடையே போட்டி நடத்தப்பட்டது.
அவர்களுள் ஆடல்,பாடல்,இசையமைத்தல் மற்றும்  MIMICRY போட்டியில் சிறந்தவர்களுக்கான இறுதி போட்டி இன்று தரமணியில் உள்ள ASIANA PLACE-ல் நடை பெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஆரி மற்றும் ஹேமா ருக்மணி (தேனாண்டாள் என்டர்டைன்மெண்ட் ​)​,அப்துல் கனி​ ​சமூக ஆர்வலர்,ஹேம் சந்தர் மற்றும் உமா ஷங்கர் ,நடுவர்களாக  சதிஷ் மற்றும் நாசர் அலியும்  ஆகியோர் கலந்து கொண்டனர்,இதில் கலந்து கொண்ட அனைத்து SOFTWARE  ஊழியர்களும் இதில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், உண்மையில் இது போன்ற நிகழ்ச்சிகளால் IT நிறுவன ஊழியர்களின் தற்கொலை போன்ற சம்பவங்கள் குறையும் என்றும் கூறி பெருமை கொண்டனர்.
aari-gpகுறிப்பாக இதில் நடிகர் ஆரி  ஆரிமுகம் (AARI MUGAM ) என்ற  நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார் ஆரிமுகம் நிறுவனத்தில்  நானும் முகமது இப்ராஹிம் மற்றும் ஷாநவாஸ்  அவர்களும் செயல்படவுள்ளோம்  எனத்தெரிவித்த ஆரி  குறும்படம்  எடுக்கும் இளைஞர்களை ஊக்க படுத்தவும் அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவும் வழி செய்யப்போவதாக கூறினார்.இதில் சிறந்த குறும்பட இயக்குநருக்கு தான் ஆரி முகம் நிறுவனத்தின் மூலம் படம் தயாரிக்க உதவுவதாகவும்  கூறினார்.