‘குற்றம் கடிதல்’ விமர்சனம்

ku-kadiஒரு பள்ளி ஆசிரியை.  ஒரு மாணவனை அவசரப்பட்டு அடித்து விட அவனுக்கு அடிபட்டு விடுகிறது. கீழே விழுந்து மயக்கமாகிறான். ஊரில் இருந்தால் பிரச்சினை என்று பள்ளி நிர்வாகம் ஆசிரியையை  ஊரைவிட்டே போகச் சொல்லவே,கணவருடன் வெளியூர் சென்று விடுகிறார்.  ஆஸ்பத்திரியில் இருந்த மாணவன். நிலைமை முற்றி கோமா நிலைக்குப் போய்விடுகிறான். ஏழை மாணவன் தரப்பு குமுறுகிறது.ஆசிரியையோ குற்ற உணர்வில் தவிக்க.. போலீஸ்அவர்களைத் தேட  கடைசியில் மாணவனின் தாயிடம்சென்று மன்னிப்பு கேட்டு அழ  முடிவு என்ன என்பதே கதை.

ஒரு கணத்தில் அவரசப்பட்டு செய்கிற செயல் எந்த அளவுக்கு விவகாரமாகி விடுகிறது. குற்றம் செய்து விட்டு தப்பி ஓடுவது எவ்வளவு விபரீதமாக ஆகிவிடுகிறது என்பதைச் சொல்லும் கதை.

ஆசிரியையாக வரும் ராதிகா பிரசித்தா சரியான தேர்வு. படத்தில் வரும் பிற பாத்திரங்களும் பாத்திரங்களாகவே தெரிகிறார்கள் .நடிகர்களாகத் தெரியவில்லை.

நம் சமூகத்தில் ஒரு பிரச்சினை விஸ்வருபமெடுப்பதையும் அது கிளைபிரிந்து ஆதாயம் தேடும் சக்திகள் வழியே படையெடுப்பதையும் அழகாகக் காட்டியுள்ளார் இயக்குநர் பிரம்மா.

பிரச்சினையை மையமாக வைத்து குளிர்காயும் ஒநாய்களாக செய்திப்பசியுடன் வியாபாரப் போட்டி யுடன் அலையும் மீடியாக்களின் சுயநலப் போக்கையும் சாட்டையடி யாக அடித்துக் கூறியுள்ளார் இயக்குநர்.

இறுதியில் அன்பே சிறந்தது குற்றம் கடிதல்,குற்றம் பொறுத்தல் தேவை என்றுகூறியுள்ளார் இயக்குநர். பரபரப்பான காட்சிகள் விறுவிறுப்பான திரைக்கதை என்று நிறைவான படத்தை வழங்கியுள்ளார் இயக்குநர் பிரம்மா. பல விருதுகளைப் பெற்றுள்ள இது வியாபார வெற்றியையும் பெற வாழ்த்தலாம்.

Pin It

Comments are closed.