குழந்தைகளோடு நேரடியாக பேச வருகிறான் சோட்டா பீம்!

chottabeem4குழந்தைகளோடு நேரடியாக பேச வருகிறான் சோட்டா பீம்! சிந்தை கவர வரும்  இந்தச் சின்னத்திரை கதாபாத்திரம்டோலக்பூருக்கு அழைத்து செல்லும் புதிய தொழில்நுட்பம்!

குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களையும் கவர்ந்த சின்னத்திரை கார்ட்டூன் என்றால் அது போகோ சேனலில் ஒளிபரப்பாகும் சோட்டா பீம் தொடர் தான். சோட்டா பீம் செய்யும் சாகசங்களும், அவன் வசிக்கும் டோலக்பூர் கிராமத்தில்  உள்ள சுட்கி, ராஜு, ஜக்கு போன்ற ஒவ்வொரு கதாபாத்திரங்களும்  குழந்தைகளின் மனம்கவர்ந்தவை.

இப்படிப்பட்ட சோட்டா பீம், நேரில் உங்களுடன் பேசினால், நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொன்னால் எப்படி இருக்கும். இந்த அதிசயம் சாத்தியமாகி உள்ளது சென்னை  வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் உள்ள எக்ஸ் டி அரங்கில்.

ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்படும் ரியல் டைம் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சோட்டா பீம் கதாபாத்திரமானது பார்வையாளர்களுடன் நேரடியாக பேசும் புதிய கேம் ஷோ ஒன்று இன்று முதல் சென்னைவாசிகளை மகிழ்விக்க  பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சோட்டா பீம் கதாபாத்திரத்தை உருவாக்கிய  கிரீன் கோல்ட் அனிமேஷன் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான ராஜீவ் சில்கா, பேசும் சோட்டா பீம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

beemடோலக்பூர் கிராமத்தில் என்னவெல்லாம் உண்டோ, எப்படியெல்லாம் உண்டோ அதனை அப்படியே தத்ரூபமாக வடித்துள்ளார் பிரபல கலை இயக்குநர் ஜானகிராமன். டோலக்பூருக்குள் நீஙகள் சென்றால் எப்படி உணர்வீர்களோ, அதனுள் நீங்கள் பயணிப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கும் வண்ணம் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கென வடிவமைக்கப்பட்ட இருக்கையில் நீங்கள் அமர்ந்தால் டோலக்பூர் கிராமத்திற்கு செல்வது போலவும், அங்குள்ள நறுமணங்களை உணர்வது போலவும்  இருக்கும். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, தனது வழக்கமான சாகசங்களுடன் அரங்கில் நுழைகிறார் சோட்டா பீம். இதுவரை சின்னத்திரையில் மட்டுமே பார்த்த அந்த அற்புத குழந்தையை நேரில் பார்ப்பதுடன், அதனுடன் பேசவும், நீங்கள் கேட்கும் கேள்விக்கு சோட்டா பீம் பதில் அளிக்கும் அதிசயமும் அரங்கேறுகிறது. ரியல் டைம் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதனை சாத்தியப்படுத்தி உள்ளார் பிரான்ஸ் நாட்டைச்  சேர்ந்த எக்ஸ் டி நிறுவனத்தின் இயக்குநர் ஜுலியன் .

15 நிமிடங்கள் கொண்ட இந்த பேசும் சோட்டா பீம் அனிமேஷன் குழந்தைகளை வெகுவாக கவரும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. இந்த பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சியை பேசும் சோட்டா பீம் இரட்டிப்பாக்குவான் என்பது திண்ணம். அனைத்து வயதினரும் பார்க்கக் கூடிய இந்த பேசும் சோட்டா பீமுடன் நீங்கள் உரையாட வெறும் 200 ரூபாய் மட்டுமே கட்டணம். வேளச்சேரி பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியின் முதல் தளத்தில் உங்களை மகிழ்விக்க வந்துள்ளான் பேசும் சோட்டா பீம்.