குழந்தைகள் மனதை பேசு பொருளாக கொண்ட படங்களே சிறந்த படங்கள்:மகிழ் திருமேனி

ahhhஅண்மையில் ​வடபழனி RKV ஸ்டுடியோவில் கிருஷ்ணகிரி மாவட்டதில் உள்ள ‘நாளந்தா’ சர்வதேச பொதுப்பள்ளி மற்றும் ஜுனியர் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்  இணைந்து  மாணவர்களுக்கு   ஆசிரியர் மற்றும்  பெற்றோரின் முக்கியத்துவத்தை எடுத்து கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள   ” ஃ ”   எனும் குறும்படத்தின்  திரையிடல் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் மகிழ் திருமேனி ( இயக்குநர் ),கிருஷ்ணா (நெடுஞ்சாலை இயக்குநர் ),நவீன் கிருஷ்ணா  (நெல்லை சந்திப்பு இயக்குநர்) சிவா ( டீல் இயக்குநர் )​,விஜய் ஆம்ஸ்ட்ராங் ( ஒளிப்பதிவாளர் ) ஆகியோர் பங்குபெற்று படக்குழுவினரை வாழ்த்தி சிறப்புரை ஆற்றினர்.

வெகு சிறப்பாக நடை பெற்ற இவ்விழாவில் இயக்குநர் மகிழ் திருமேனி மாணவர்களின் திரைப்படமுயற்சிகளை ஊக்குவித்து மாணவர்களை வாழ்த்திப் பேசினார்.  உலக அளவில் குழந்தைகள் மனதை பேசு பொருளாக கொண்ட படங்களே சிறந்த படங்கள். அந்த வகையில் குழந்தைகள் மனதை பேசு பொருளாக எடுத்துக் கொண்டதற்காக இயக்குநர் புவனை வாழ்த்தினார். மேலும் சிறந்த முறையில் பள்ளி,கல்லூரியை நடத்தி வரும் நாளந்தா பல்கலைகழக ஆசிரியர்களையும் வாழ்த்தினார். மேலும் விழாவில் பேசிய இயக்குநர் கிருஷ்ணா மாணவர்கள் பெரிய திரைப்படங்கள் எடுக்க வரவேற்று வாழ்த்திப் பேசினார். மற்றும் அனைத்து சிறப்பு விருந்தினர்களும் மாணவர்களையும் திரைப்படத்தையும் வாழ்த்திப் பேசினர்.

இக்குறும்படத்தை புவன் என்பவர் இயக்கியுள்ளார். Dr.புவியரசன் கதை நாயகனாக நடித்துள்ளார் மாணவர்கள் மனதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் புரிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கில் இக்குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.