‘கூத்தன்’ படத் தொடக்கவிழா!

koothan2நீல்கிரிஸ் எண்டர்டைமென்ட்  திரு. “நீல்கிரிஸ் முருகன்”  தயாரிக்கும் முதல் படம்  “கூத்தன் ” இந்த படத்தின் பட துவக்கவிழா மற்றும்  பூஜை நேற்று  காலை எம்.ஜி. ஆர் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் “QUBE” சினிமா நிறுவனர், களத்தூர் கண்ணம்மா தயாரிப்பாளர் மற்றும் ஏ.வி.எம். மெய்யப்பசெட்டியார் மருமகனுமான “அருண் வீரப்பன்” கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்தப்படத்தில்நாயகனாக அறிமுகமாகிறார்  ராஜ்குமார். மேலும் நாகேந்திர பிரசாத் (பிரபுதேவா தம்பி), ஊர்வசி , மனோபாலா, பாக்யராஜ், கவிதாலயா கிருஷ்ணன், ஜூனியர் பாலையா, ஸ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், மற்றும் புதுமுக நடிகர் சுரேஷ், தீனா, ஆனந்த், கெளதம், மற்றும் நடிகை ஸ்ரீஜிட்டா, கீரா, சினிதா.மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குநர் வெங்கி.A.L.  ஒளிப்பதிவு மாடசாமி,  இசை பாலாஜி,  படத்தொகுப்பு பீட்டர் பாபியா,
கலை “சி.ஜி.அனந்த்”,  நடனம் “கல்யாண் ” “சுரேஷ்”. நிர்வாக தயாரிப்பு “மனோஜ் கிருஷ்ணா”.