கெட்டிக்கார நடிகர் நட்டி!

natty44ஹிந்தியில் அமிதாப்பச்சன் முதல் வருண் தேவ் வரை அனைத்து முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர்  நட்டி (எ) நட்ராஜ்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு உட்பட 21 படங்களுக்கு இதுவரை ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தவிர 1000 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கும், அறுபதுக்கும் மேற்பட்ட ஆவணப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒளிப்பதிவு மட்டுமல்லாமல் நாயகனாகவும் தற்போது ஜொலித்து வருகிறார். தமிழில் “ நாளை “ என்ற படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து மிளகா, சக்கர வியூகம், முத்துக்கு முத்தாக, கதம் கதம், மாபெரும் வெற்றி பெற்ற “ சதுரங்க வேட்டை” போன்ற படங்களிலும் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

நிவின் பாலியுடன் “ அவர்கள் ” மற்றும் தற்பொழுது வெளியாக உள்ள  “ எங்கிட்ட மோதாதே  “ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

எங்கிட்ட மோதாதே படம் பற்றி அவர் கூறியதாவது…

“இரண்டு பெரிய நாயகர்களின் ரசிகர்களுக்குள் நடக்கும் பிரச்சனை எப்படி அரசியலாக மாறுகிறது என்பதுதான் என்கிட்ட மோதாதே படத்தின் கதை.

இந்த படத்தில் நான் கட்டவுட் வரையும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சினிமா ரசிகர்களின் பிரச்சனை எப்படி அரசியலாக மாறுகிறது அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன அந்த அரசியல் வாதிகளை ரசிகர்கள் எப்படி சமாளித்து பிரச்சனையிலிருந்து வெளியே வருகிறார்கள் என்பதை எதார்த்தமாக சொல்லும் படம் இது “என்றார் நட்டி.