கை நிறைய படங்களுடன் இஷாரா நாயர்!

311242_224461677612202_100001451146409_658327_1669917132_nசென்ற வருடத்தின் வெற்றி படங்களில் ஒன்றான ‘ சதுரங்க வேட்டை ‘ படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் இஷாரா நாயர். கேரளாவில் மாடலிங், சென்னையில் நடிக்க வாய்ப்புகள் என பிசியாய் சிறகடிக்கிறார் இஷாரா நாயர்.

“ கல்லூரி படிக்கும் பொழுதிலிருந்து நடிப்பின் மேல் ஆர்வம் இருந்தது. மாடலிங் செய்து வந்தேன். வெண்மேகம் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அதே நேரத்தில் தேடி வந்தது. சதுரங்க வேட்டை படத்தில் நல்ல நடிப்பதற்கு ஏற்ற கதா பாத்திரம். ஆரம்பத்தில் எனக்கு அழுது நடிப்பதென்றால் முகம் அசிங்கமாக பயமாக இருக்கும். அந்த கதா பாத்திரம் அழுகிறது, அது அந்த கதா பாத்திரத்தின் முகம் என்று புரிந்து கொண்டேன். “அட டா!

“ சதுரங்க வேட்டை, “பப்பாளி” படங்களுக்கு பிறகு, “பப்பரபாம்”, “அதிமேதாவிகள்,’ ‘செல்ஃபி’ என வரிசையாக படங்கள் நடித்த வண்ணம் உள்ளேன்.   ‘பப்பரபாம்’ படத்தில் 80 களின் கெட்-அப்பில் வருகிறேன். அதுவும் ஒரு நல்ல கதா பாத்திரம். அதி மேதாவிகள் படத்தில் காமெடி கலந்தவேடம். செல்ஃபி ஒரு த்ரில்லர் திரைப்படம்.”அப்படிப் போடும்மா!

“ ஒரு திரைப்படம் விட்டு மறு திரைப்படம் என நடித்துகொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் பல படங்கள் வந்து செல்கின்றன. நல்ல பெயர் வாங்கக்கூடிய வித்தியாசமான ரோல்களில் நடிக்க வேண்டும், ரசிகர்கள் மனதில் ஒரு சிறிய இடமாவது பிடித்திட வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ” எனக் கூறினார் இஷாரா.  வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.    320877_224462250945478_100001451146409_658342_2084651480_n

Pin It

Comments are closed.