கொள்ளக்காரத்துரையாக மாறிய வெள்ளக்காரதுரை !

vellaa-durai31000 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ள அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில், எழில் இயக்கத்தில் உருவான    “வெள்ளக்காரதுரை” படம் கடந்த கிறிஸ்துமஸ் அன்று  200  திரையரங்குளில் வெளியாகி வெற்றி பெற்றது. மக்களின் அமோக வரவேற்பு காரணமாக இப்போது கூடுதலாக 100 திரையரங்குகளில் மீண்டு திரையிடப் பட்டுள்ளது.

விக்ரம்பிரபு – ஸ்ரீதிவ்யா, சூரி நடிப்பில் எழிலின் சிறந்த திரைகதையின் மூலம் படம் அனைத்து தரப்பு மக்களிடமும் போய் சேர்ந்து வெற்றி பெற்றது.ஆக  வசூலில் ,ரசிகர்களைக்கவர்ந்ததில் கொள்ளக்காரத்துரையாக மாறியுள்ளது வெள்ளக்காரதுரை!

தனது முதல் படம் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து அன்புசெழியன் தனது கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக மீண்டு நிறைய படங்களை தயாரிக்க போகிறேன் என்று அறிவித்துள்ளார்.