
நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் திரைப்படம் “சபாஷ் நாயுடு”. இந்த படத்தில் அவருடைய மகள் ஸ்ருதி ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்திலும், கௌதமி தடிமல்லா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாக “சபாஷ் நாயுடு” படத்தில் கௌதமி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுவது சுருதி ஹாசனுக்கு பிடிக்கவில்லை…என்ற ஆதாரமற்ற செய்திகளும், வதந்திகளும் பரவி வருகிறது. ஆனால் இவை அனைத்தும் வெறும் கட்டுக்கதைகள் தான் என்று சொல்லி இருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.
இந்த வதந்திகளை பற்றி ஸ்ருதி ஹாசனின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “தனெக்கென்று ஒரு தனி ஸ்டைல்…தனக்கென்று ஒரு தனி டிசைன் என தனித்துவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ருதி ஹாசன், தன்னுடைய திரைப்படங்களிலும் அதையே தான் விரும்புகிறார். ஒவ்வொரு படத்திலும், தன்னுடைய ஆடை அலங்காரம் மீதும், தன்னுடைய தோற்றத்தின் மீதும் அதிக அக்கறை கொண்ட ஸ்ருதி, அதனை பற்றி தயாரிப்பாளர்களிடமும், இயக்குநர்களிடமும் கலந்து பேசுவது வழக்கம்.