‘சகாப்தம் ‘ படத்தின் ஆடியோ உரிமையை 42 லட்சத்திற்கு பெற்ற நிறுவனம்!

Sagaptham Stills (16)விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘சகாப்தம்’. இதில் சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக நேஹாஹிங், சுப்ரா ஜயப்பா நடிக்கின்றனர். ஜெகன், ரஞ்சித், சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். சுரேந்திரன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷ்ன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக சிங்கப்பூர் மலேசியா, பேங்காங் உள்ளிட்ட வெளிநாடுகளில் பிரமாண்டமான வகையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
கடும் போட்டிகளுக்கிடையே இப்படத்தின் ஆடியோ உரிமையை 42 லட்சம் ரூபாய்க்கு லகரி ஆடியோ நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த லகரி ஆடியோ நிறுவனம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் முன்னணி நிறுவனமாகும். இது ஏற்கெனவே கூலிக்காரன், அண்ணாமலை, ரோஜா, காதலன், ஜென்டில்மேன் ஆகிய வெற்றிப்படங்களின் ஆடியோ உரிமையை வாங்கியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் சகாப்தம் பட ஆடியோவை இந்நிறுவனம் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் கார்த்திக்ராஜா ஜீவா இசையில் சிம்பு, ரம்யா நம்பீசன் மற்றும் ஆண்ட்ரியா பாடிய “அடியே ரதியே” என்ற பாடல்  யூடியூபில் வெளியிட்டப்பட்டது. பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே ஆயிரக்கணகானவர்கள் பாடலை கேட்டு ரசித்துள்ளனர்.

இந்த ஆண்டு பொங்கலில் இளைஞர்கள் அனைவரும் முணுமுணுக்கும் பாடல் இது என்பதால் இந்த படத்தில் பாடல்களும், இந்த படமும் ஒரு புதிய சகாப்தத்தை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.