சங்கத்துக்கு மாற்றம் என்பது தேவை :விஷால்

pandavar.5பாண்டவர் அணி சார்பில் இன்று மதுரையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் பேசியது ;
எனக்கும் , பாண்டவர் அணிக்கும்  தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் மீது மிகப்பெரிய  மரியாதை இருக்கிறது. எங்களை பற்றி சிலர் தேவை இல்லாத புரளியை கிளப்பி வருகிறார்கள். தமிழக முதலவர் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு எங்களை பற்றி தெரியும். மதுரையில் உள்ள 29 உறுப்பினர்களும் , எங்கள் பாண்டவர் அணி ஊழலுக்கு எதிராக போராடுவதை பார்த்து தங்களுடைய அடையாளம் யாரிடமும் கொடுக்காமல் நிச்சயம் எங்களுக்கு தான் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர்.  நாளை முதல் தபால் மூலம் வாக்களிக்க இருக்கும் வாக்காளர்களுக்கான தபால் வாக்கு பதிவு சம்பந்தப்பட்ட வேலைகள் ஆரம்பமாக உள்ளது. தமிழ் நாட்டில் இருந்து மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்களிலும் இருந்து வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

கண்டிப்பாக இந்த நடிகர் சங்க தேர்தல் நடக்க வேண்டும் என்பதில் நாங்கள் அனைவரும் உறுதியாக உள்ளோம். எந்த ஒரு அமைப்புக்கும் , சங்கத்துக்கும் மாற்றம் என்பது தேவை. மாற்றம் என்று ஒன்று வந்தால் தான் குறைகள் அனைத்தும் களையப்பட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்.  தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைபுலி எஸ் தாணு அவர்கள் சமாதானம் பேச வேண்டும் என்று கூறுகிறார். அவர் மேல் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் அவர் சமாதானம் என்று கூறுவது அவர்கள் ஆதரிக்கும் சரத் குமார் அவர்கள் நடிகர் சங்க தலைவர் பதவியில் நீடிக்க தானோ ?? அவர் கூறும் சமாதானத்துக்கு அர்த்தம் அது தானோ என்று கூறினார்.