’சத்ரு’ விமர்சனம்

இளம் குற்றவாளிகள் பின்னணியிலான கதைக்களத்தைக் கொண்ட படமே  ‘சத்ரு’.சரி படத்தின் கதை என்ன?

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனப் பணியாற்றுபவர் காவல் துறை உதவி ஆய்வாளர் கதிரேசன் (கதிர்).  துடிப்பான அவர் , உயர்அதிகாரிகளின் உத்தரவையும் மீறி தடாலடியாக இறங்கி ரவுடிகளை வெளுத்து வருகிறார்.அதற் காக ஒவ்வொரு முறையும் தனது உயர் அதிகாரியிடம் வெறுப்பைச் சம்பாதிக்கிறார்.

குழந்தைக் கடத்தலின் மூலம் பணம் பறித்துவரகிறது பிரபாகரன் (லகுபரன்) தலை மையிலான ஐந்து  பேர் கொண்ட கும்பல். ஒரு குழந்தை யைக் கடத்தி அதன் மூலம் 5 கோடி ரூபாய் பணம் கைக்கு வந்த நேரத்தில் கதிரேசன் உள்ளே புகுந்து பிரபாகரனின் நண்பனைக் கொன்று குழந்தையைக் காப்பாற்றிவிடு கிறார். இந்தக் கோபத்தில் கதிரேசன் குடும்பத்தினர் அனைவரையும் பிரபாகரன், கொலைசெய்யத் துடிக்கிறார் . தன் குடும்பத்தினரைக் காப்பாற்ற கதிரேசன் முயல்கிறார். இதில் யார் வெற்றிபெறு கிறார் என்பதை ஆக்‌ஷன் கலந்த திரில்லராகச் சொல்கிறது சத்ரு.

பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்கு பிறகு கதிரின் மீது தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள். இதை அவர் அடுத்த படத்தில் பூர்த்தி செய்துள்ளாரா பார்ப்போம்.

படம் முழுவதும் இளம் குற்றவாளிகளாகவே வலம் வருகின்றனர். 5 பேர் கும்பலின் தலைவனாக லகுபரன் நடித்துள்ளார். ராட்டினம் படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் இதில் வில்லனாக நடித்துள்ளார். உடன்வரும் நண்பர்களாக ஆதித்யா டிவி குரு, அருவி பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் நீலிமா ராணி, கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ருஷ்டி டாங்கே, சுஜா வருணி வரும் பெண்கதாபாத்திரங்களுக்கும் சொல்லிக்கொள்ளும்படியாக அழுத்தமான கதாபாத்திரம் இல்லை.

பரியேறும் பெருமாள் சாயல் இல்லாமல் போலீஸாக மிடுக்காக நடித்துள்ளார் கதிர். இப்படம் இவருக்கு அடுத்த ஒரு வெற்றிப்படம் என்றே கூறலாம். படம் முழுவதும் முறைத்தபடியே வருகின்றார். இவருக்கும், லகுபரனுக்கும் நடக்கும்  எலியும் பூனையும் விளையாட்டு தான் கதையே.

திரைக்கதை சிறப்பாக எழுதி அறிமுக இயக்குநர் நவீன் நஞ்சுண்டன் இயக்கியுள்ளார். பின்னணி இசையை நன்றாகவே கொடுத்துள்ளார் அம்ரீஷ் கணேஷ். படத்தின் பெரும்பாலான பகுதி இரவிலேயே நடக்கிறது. ஆனாலும் ஒளிப்பதிவை சிறப்பாகச்  செய்துள்ளார் மகேஷ் முத்துசாமி.

படம் ஆரம்பித்ததிலிருந்து அடுத்து என்ன நடக்கும் என்று விறுவிறுப்புடன் படம் நகர்கிறது. ஆனால்  சில இடங்களில் போலீஸ் என்ன செய்கிறார்கள் என்று கேட்கவைக்கும் அளவுக்கு லாஜிக் மீறல் இருக்கிறது. 

நான் மகான் அல்ல உட்பட சில க்ரைம் திரில்லர் படங்களின் சாயலும் நமக்கும் நினைவுபடுத்துகிறது படம்.இயக்குநர் அவரது உயரத்துக்கேற்ற பூ பறித்துள்ளார்.

Pin It

Comments are closed.